Ad Code

மேயேகோ செயலி அறிமுகம் • Meyego App Launch • 25 March 2026


செயலி அறிமுக உரை:
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. திருமறையை எளிமையாக கற்றுக் கொள்ள ஆண்டவருடைய நடத்துதலின்படி புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மேயேகோ மென் பொருள் செயலிக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம். ஆண்டவருடைய வார்த்தைக்கான மிகச் சரியான வியாக்கியானங்களைத் தமிழ் மொழியில் எளிமையாகக் கற்றுக்கொண்டு, ஆண்டவரே போல வாழவே இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மேயேகோ மென்பொருள் செயலி மூலம் தினசரி ஆன்மீக தியானம், ஆலய வழிபாட்டு ஒழுங்குகள், திருச்சபைகள் மற்றும் மிஷனரிகளின் வரலாறு, நல் ஆலோசனைகள், பொது அறிவு துணுக்குகள் மற்றும் இறையியல் கல்வி தொடர்பான குறிப்புகளையும் மிக எளிமையான முறையில் கற்றுக் கொள்ளலாம். மேயேகோ செயலியை Google Play Store -ல் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தி கர்த்தருடைய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வோம். கிருபை நம்மோடு இருப்பதாக ஆமென்!

ஜெபத்துடன் வாழ்த்தும், 
திரு. தா. ரெபின் ஆஸ்டின்

மேயேகோ உரை:
இறைமைந்தர் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் வாழ்த்துகள். கன்னிமரியாவின் மங்கள வாக்குத் திருநாளில், நமது மேயேகோ செயலி வெளியிட அருள்செய்த எல்லாம் வல்ல இறைவனுக்கு எல்லா புகழும் உண்டாகட்டும்! கடந்த ஐந்தாண்டு காலம் நமது வலைத்தளம் இறையியல் செய்திகளையும், வரலாற்றையும் தமிழ் மொழியில் பாமர மக்களும் அறிந்து கொள்ளும் வண்ணம் இறைப்பணி செய்துகொண்டிருக்கிறது. இது ஒருவரின் பணியல்ல; இறைநன்பர்கள் பலரின் கூட்டு முயற்சி. இன்னும் இப்பணி சிறக்க, கிடைத்த இறைக்கொடை தான் இந்த செயலி. இந்தச்    செயலிக்கு வாழ்த்துரையிட்டு அறிமுகம் செய்த என் அன்பு நண்பர். இறைப்பணியாளர், தா. ரெபின் என்ற ரபீ -க்கும் மற்றும் இந்த செயலிக்கு செயல்வடிவம் கொடுத்த என் அன்பு சகோதரர், கணினி அறிவியல் பொறியியல் துறை மாணவர் ம. ஷாலாம் -க்கும் என் உள்ளங்கனிந்த நன்றிகள். நம் மேயேகோ வாசகர்கள் அனைவரும் இந்தச் செயலி (Meyego - Google Play Store) வாயிலாக தொடர்ந்து பயன்பெற்று இறை அறிவிலும், உறவிலும் சிறந்து விளங்க ஜெபிக்கிறோம். இறையாசி
உங்களோடிருப்பதாக.

அன்புடன், 
மேயேகோ+
(கன்னிமரியாள் மங்களவாக்கு திருநாள்) 


Post a Comment

0 Comments