திருவசன தியானம் 2026
1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: பெந்.திரு. பின்வரும் 16 -ம் ஞாயிறு (திருத்துவ-15)
தேதி: 13/09/2026
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: ஏசாயா 58:6-10
நிருப வாக்கியம்: 1யோவான் 3:16-18
நற்செய்தி பகுதி: 9: 35-38
சங்கீதம்: 82
2. திருவசனம்
தலைப்பு: அர்த்தமுள்ள அருட்பணி
1 யோவான் 3:18
(பவர் திருப்புதல்) என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
(திருவிவிலியம்) பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்.
3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
திருநெல்வேலி திருமண்டல நற்செய்தி பணி ஞாயிறு
4. வசன குறிப்புகள்
4.1 நூலாசிரியர்:
அப்போஸ்தலனாகிய யோவான் கி.பி. 1ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (சுமார் கி.பி. 85–95) எபேசு நகரத்தில் இருந்து இந்த நிருபத்தை எழுதினார்.
4.2 அவையோர்:
இந்த நிருபத்தை எபேசுவைச் சுற்றியிருந்த ஆசியா மைனர் (இன்றைய துருக்கி) பகுதித் திருச்சபைகளுக்கும், அங்குள்ள கிறிஸ்தவ விசுவாசிகளுக்கும் எழுதினார்.
4.3 வசன பின்னணி:
அன்பை எந்த முறையில் (manner of Love) செலுத்த வேண்டும் என்பதையும் மற்றும் அன்பினுடைய தரம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் v. 18-ல் யோவான் மிகத் தெளிவாக விளக்குக்கிறார். கோட்பாடு (theoretical) ரீதியாக இருக்கிற அன்பை காட்டிலும் செயல் வடிவில் (active) இருக்கிற அன்பே மிகவும் வலிமை வாய்ந்தது என்பதை யோவான் இங்கு அறிவுறுத்துகிறார்.
5. திருவசன விளக்கம்
(teknia)=பிள்ளைகள்
யோவான் அப்போஸ்தலன் தன்னை ஆவிக்குரிய தகப்பனாக கருதி திருச்சபையின் மக்களை ஆவிக்குரிய தன் சொந்த குழந்தையாக ஏற்று கொண்டதால் அவர்களோடு உள்ள தன்னுடைய நெருங்கிய உறவை (intimate relationship) வெளிப்படுத்துவதற்கு பிள்ளைகளே என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார்.
ἀγαπάω (agapaó)= சுயநலமற்ற அன்பு
எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் முழு மனதோடு பாவிகள் மீது வெளிப்படுத்தக்கூடிய கடவுளின் அன்பை குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது . அந்த அன்பை ஆண்டவரே ஏற்றுக் கொண்டவர்களும் வெளிப்படுத்த வேண்டும் என்பதை யோவான் இங்கு அறிவுறுத்துகிறார்.
μὴ ἀγαπῶμεν- Let us not love
ஒரு வார்த்தையை எதிர்மறையாக குறிப்பதற்க்கும் (அ) இல்லை என்பதை சுட்டி காட்டுவதற்கும் இந்த (μὴ-Not) வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசனத்தில் Not என்கிற வார்த்தை தெய்வீக அன்பை எப்படி ( ἀγαπάω) வெளிப்படுத்தகூடாது என்பதை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது.
λόγος (logos)= வார்த்தை and γλῶσσα (glōssa)= நாவு
ஒரே கருத்தை உள்ளடக்கிய இரண்டு வெவ்வேறு வார்த்தைளை ( வசனம்=பேச்சு & நாவு) யோவான் இங்கு பயன்படுத்தியிருக்கிறார் அன்பு என்பது வெறும் வாய்மொழியின் வெளிப்பாடாக (verbal expression) இல்லாமல் மாறாக உணர்வைத் தாண்டி செயலில் வெளிப்பட வேண்டும் என்பதை யோவான் தன்னுடைய மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
ἔργον (ergon) = work, deed
கிரேக்க மொழியில் இந்த வார்த்தையானது அரசுப் பணியில் இருந்து பொதுப் பதவியை வகித்த ஒருவரைக் குறிக்க இது பயன்படுத்தப்பட்டது. புதிய ஏற்பாட்டில் இந்த வார்த்தை கடவுளுக்கும் மனிதர்களுக்கும் செய்ய வேண்டிய வேலையை (work- செயல் ) குறிக்க பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
ἀληθείᾳ (alētheia) = truth
இங்கு உண்மை(truth) என்கிற வார்த்தையானது எந்தவொரு ஒளிவு மறைவு இல்லாமலும், போலித் தன்மை இல்லாமலும் அன்பை செயலில் வெளிப்படுத்தும் தன்மையை குறிக்கிறது.
6. இறையியல் & வாழ்வியல்
அன்பு (Love) என்கிற வார்த்தை கிரேக்க மொழியில் முக்கியமாக எட்டு (Éros- Romantic Love, Philia- Friendship love, Storgē- Family Love, Agápē- Selfless Love & unconditional love, Ludus- Playful Love &teasing, pragma- Love based on commitment and understanding, Philautía-Self Love, Xenía- guest frienship ) விதமான அர்த்தத்தை கொண்டிருக்கிறது. அதில் Iயோவான் 3:18-ல் அதன் ஆசிரியர் அகாப்பே - Agápē என்கிற தன்னலமற்ற ஆண்டவருடைய அன்பை வெளிப்படுத்த அறிவுறுத்துகிறார். தெய்வீக அன்பு எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் பாவிகள் மீது வெளிப்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்ல அன்பு என்பது உணர்வைத் தாண்டி செயலில் வெளிப்படுத்தக்கூடிய தன்னலமற்ற ஒன்றாகும். அர்த்தமுள்ள அருட்பணி சுயநலமில்லாமல் செயலில் வெளிப்படுத்தக்கூடிய அன்பில் மலர்கிறது.
7. அருளுரை குறிப்புகள்
Written by
Mr. T. Rebin Austin
CSI Diocese of Tirunelveli

0 Comments