Ad Code

ஏரோது அகரிப்பா King Agrippa II Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 110
ஏரோது அகரிப்பா: அறிந்தும் உணரவில்லை

1. பெயர்:  
ஏரோது அகரிப்பா King Agrippa II

2. அர்த்தம்: 
வேதனையோடு பிறந்தவன்

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 25:13-27 – அகரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயும் பெஸ்து ஆளுநரைச் சந்திக்க செசரியாவுக்கு வருதலும், பவுலைப் பற்றிய செய்தி பரிமாறப்படுதலும்.
அப்போஸ்தலர் 26:1-32 – அகரிப்பா ராஜாவின் முன்பாக அப்போஸ்தலனாகிய பவுல் தைரியமாகத் தன் சாட்சியையும் சுவிசேஷத்தையும் அறிவித்தல்.
அப்போஸ்தலர் 26:28 – அகரிப்பா பவுலை நோக்கி: "நான் கிறிஸ்தவனாகிறதற்கு கொஞ்சம் குறைய என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய்" என்று கூறுதல்.

4. வரலாற்றுக் குறிப்புகள்
• வம்சாவளி: இவர் முதலாம் ஏரோது அகரிப்பாவின் மகனும், பெரிய ஏரோதின் கொள்ளுப்பேரனும் ஆவார்.
• ஆட்சி: யூதேயா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை உரோமை பேரரசின் கீழ் ஆண்ட கடைசி ஏரோது வம்சத்து அரசர் இவராவார்.
• தேவாலய உரிமை: எருசலேம் தேவாலயத்தைப் பராமரிக்கும் பொறுப்பும், ஆசாரியர்களை நியமிக்கும் உரிமையும் உரோமை பேரரசால் இவருக்கு வழக்கப்பட்டிருந்தது.
• எருசலேம் அழிவு: கி.பி. 70-இல் எருசலேம் உரோமையரால் அழிக்கப்பட்டபோது, இவர் உரோமைப் படைத்தலைவன் தீத்துவுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். கி.பி. 92-100 காலப்பகுதியில் வாரிசு இன்றி இறந்தார்.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
பவுலின் வல்லமையான சாட்சியையும் தீர்க்கதரிசனங்களையும் கேட்ட அகரிப்பா, பவுல் குற்றமற்றவர் என்பதையும் சுவிசேஷத்தின் உண்மையையும் உணர்ந்துகொண்டார். இருப்பினும், உலகப் பதவி, புகழ் மற்றும் மக்களின் தயவுக்குப் பயந்து, கிறிஸ்தவனாக மாறாமல் அந்த நல்வாய்ப்பை நழுவவிட்டார். சத்தியத்தை அறிவது மட்டும் போதாது; அதன்படி உடனடியாகத் தீர்மானம் எடுத்து வாழ்வதே இரட்சிப்புக்கு வழிநடத்தும்.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Post a Comment

0 Comments