திருமறையில் யார் இவர் யாரோ? - 103
தீரோபிமு: பலவீனத்திலும் கடவுளுக்காக
1. பெயர்:
தீரோபிமு Trophimus
2. அர்த்தம்:
வளர்க்கப்பட்டவர்
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 20:4 – பவுலின் 3-ஆம் மிஷனெரிப் பயணத்தில் அவருடன் சென்ற ஆசியப் பகுதியின் சக ஊழியர்.
அப்போஸ்தலர் 21:29 – இவரை ஆலயத்திற்குள் கூட்டிவந்து தீட்டுப்படுத்தியதாக பவுல் மீது யூதர்கள் தவறாகக் குற்றம் சாட்டினர்.
2 தீமோத்தேயு 4:20 – பவுல் இவரை மிலேத்துவில் வியாதியுள்ளவனாக விட்டுவந்ததாகக் குறிப்பிடுகிறார்.
4. வரலாற்றுக் குறிப்புகள்:
• பின்னணி: எபேசு நகரத்தைச் சேர்ந்த புறஜாதி கிறிஸ்தவர்; பவுலின் நம்பிக்கைக்குரிய சக ஊழியர்.
• காணிக்கைப் பணி: எருசலேம் பரிசுத்தவான்களுக்கான நிவாரணக் காணிக்கையைக் கொண்டுசெல்ல பவுலுடன் பயணித்தவர்.
• எருசலேம் கலக்கம்: பவுல் இவரை ஆலயத்திற்குள் கூட்டிவந்ததாக யூதர்கள் தவறாகப் புரிந்துகொண்டதால் பெரிய கலக்கம் உண்டானது.
• உண்மையுள்ள தோழன்: பவுலின் கடைசி காலம் வரை அவருடன் உறுதியாக நின்ற நண்பர்.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
பவுல் அற்புதமாகப் பல நோயாளிகளைக் குணமாக்கிய போதிலும், தனது நெருங்கிய சக ஊழியரான தீரோபிமுவை வியாதியின் போது உடனடியாகக் குணமாக்காமல் மிலேத்துவில் விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. இதன் மூலம், "எல்லாப் அற்புதங்களும் நமது விருப்பப்படி நடப்பதில்லை; மேலும், சூழ்நிலைகள் சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும், கிறிஸ்துவின் ஊழியத்தில் இறுதிவரை உண்மையாய் இருப்பதே சிறந்த சீடத்துவமாகும்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments