Ad Code

யோவான் 14.16 பின்னணி என்ன? John 14.16 Background & Explain

யோவான் 14.16 பின்னணி: இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய இரவில், இறுதி இராப்போஜனம் முடிந்த பின்பு, விரைவில் தாம் சீஷர்களை விட்டுப் பிரியப்போவதாகக் கூறிய போது, சீஷர்கள் மிகவும் கலங்கினர். அவர்களின் துக்கத்தைப் போக்கவே, தமக்கு நிகரான, அதே தன்மைகளைக் கொண்ட "வேறொரு தேற்றரவாளனை" (தூய ஆவியானவரை) தந்தை அனுப்புவார் என்றும், அவர் என்றென்றைக்கும் அவர்களுடனே இருப்பார் என்றும் இயேசு வாக்குறுதி அளித்தார்.

1. எங்கே இருக்கிறார் ஆவியானவர்? 
தூய ஆவியானவர் வானத்தில் மட்டுமோ அல்லது எட்டாத தூரத்திலோ இல்லை. இயேசுவை விசுவாசித்து, அவரைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு விசுவாசியின் உள்ளத்திலும் அவர் தங்கியிருக்கிறார். "உங்கள் சரீரமானது நீங்கள் இறைவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" (1 கொரிந்தியர் 6:19).

2. எப்படி இருக்கிறார் ஆவியானவர்? 
தூய ஆவியானவர் விசுவாசிகளின் உள்ளத்தில் வாசம்பண்ணுகிறார்: ஏதோ ஒரு இயந்திரத்தில் செயல்படும் விசை (Mechanical Force) போல, எங்கிருந்தோ தூரத்தில் இருந்து கொண்டு மனிதர்களை இயக்கும் ஒரு உயிரற்ற சக்தி அல்ல. ஆவியானவர் வெறும் காற்று என்றோ, வெறும் ஒளியென்றோ நாம் சுருக்கிவிட முடியாது. அவர் ஒரு நபர் (Personality). 

3. ஏன் இருக்கிறார் ஆவியானவர்? 
i) தூய ஆவியானவர் நம் வாழ்வில் எது சரி எது தவறு என்று உணர்த்தி, நம்மைப் பாவ வழிகளில் இருந்து தடுத்து நல்வழியில் நடத்துகிறார். 
ii) இயேசுவின் உண்மையான சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை வழிநடத்தி புரிய வைக்கிறார். 
iii) மேலும், நாம் சோர்ந்து போகும் துன்ப வேளைகளில் தேற்றரவாளனாக நமக்கு ஆறுதல் அளித்து, நம் பலவீனங்களை நீக்கி தெய்வீகப் பெலத்தால் நம்மைத் தேற்றுகிறார். 

ஏன் இந்த ஞாயிறு?
விண்ணேற்பு விழா (Ascension of Jesus) என்பது இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த 40-ஆம் நாளில் விண்ணகத்திற்கு எழுந்தருளியதை ஆசரிக்கும் நாளாகும். இதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்கு விண்ணேற்பு ஞாயிறு என்று பெயருண்டு. பெந்தேகோஸ்தே ஞாயிறுக்கு முன் வரும் இந்த ஞாயிறுக்கிழமையில் இயேசு தூய ஆவியானவர் குறித்த வாக்குக் கொடுத்தை பற்றிய வேதபகுதிகள் தியானிக்கப்படும். ஏனென்றால், அப்போஸ்தலர் 1 ஆம் அதிகாரத்தில் இயேசுவின் விண்ணேற்பு நடைபெற்ற போது, தூய ஆவியின் வாக்குத்தத்தம் அவரால் சொல்லப்பட்டது வருகிறது. 

மேயேகோ 
9486810915

Post a Comment

0 Comments