அன்பானவர்களே... அன்பின் வாழ்த்துகள்... தவக்கால மேயேகோ திருமறை வினாடி வினாவிற்கு (Meyego Scripture Bible Quiz) உங்களை வரவேற்கிறோம். (மார்ச் 05 முதல் ஏப்ரல் 20 வரை). For Contact: 9486 810 915 20 முதல் 40 கேள்விகள் பெற கிளிக் செய்யவும்
இன்றைய நாளுக்கான கேள்வி:
20. திருமறையில் சாலொமோன் அரசன் எழுதிய நூல்கள் எவை?
19. தீர்க்கதரிசியால் முன்னுரைக்கப்பட்டு, பிறந்த ராஜாவின் பெயரையும் தீர்க்கர் முன்னுரைத்தார். அந்த ராஜா யார்?
18. இரட்சண்யக் கொம்பு - யார்?
17. சங்கீதம் 51 எந்த அதிகாரத்தோடு தொடர்புடையது? அந்த ராஜா யார்?
16. பழைய ஏற்பாட்டில் இவர் தீர்க்கதரிசி என்றோ, தீர்க்கதரிசனம் உரைத்தார் என்றோ குறிப்பிடப்படவில்லை... ஆனால், புதிய ஏற்பாடு இவரை பழைய ஏற்பாட்டு தீர்க்கராக அடையாளப்படுத்துகிறது யார் இவர்?
15. அப்போஸ்தலர் 15 ஆம் அதிகாரத்துக்கு இணையான சம்பவம் உள்ள வேறொரு அதிகாரம் என்ன? (பவுல் எழுதிய ஒரு நிருபம்)
14. "ஆதியிலே" எனத் தொடங்கும் இரண்டு புத்தகங்கள் எவை?
13. "சேலா" என்கிற வார்த்தை சங்கீத புத்தகம் தவிர்த்து வேறு எங்கே வருகின்றது?
12. பவுல் ஒருவனுக்காக ஒரு கடிதமே எழுதினார்; அதுவும் சிறைச்சாலையில் தான் சுவிசேஷம் அறிவித்தவனுக்காக... அவன் யார்?
11. யூத மக்கள் (இஸ்ரவேலர்) இரண்டாம் அடிமைத்தனம் எந்த நாட்டில் மையமாக இருந்தது?
10. பன்னிரு அப்போஸ்தலரில் முதல் இரத்த சாட்சி யார்?
விடைகளை ஏப்ரல் 20 க்குப் பின் மொத்தமாக அனுப்பவும்.
9. லூக்கா நற்செய்தி நூலுக்கும் அப்போஸ்தலருடைய நடபடிகள் நூலுக்கும் உள்ள வேதாகம ரீதியிலான ஒற்றுமை ஒன்று எழுதுக.
8. வேறு தேசத்தை சேர்ந்த ஆனால் இஸ்ரவேல் கோத்திரத்தில் இணைந்த இரு பெண்கள் பெயரை எழுதுக.
7. தன்னை பாவி என்று அடையாளப்படுத்திக் கொண்ட மீட்கப்பட்ட பாவி பெயரை எழுதுக.
6. இரண்டு பெயர்கள் கொண்ட இயேசுவின் சீடர்கள் யார் யார்?
5. ஒரே பெயர்; ஒரே ஏற்பாடு;
ஆனால் வேறு வேறு அழைப்புள்ள வேறு நபர்கள்? ஏதேனும் ஒரு பெயர் எழுதுக.
4. யாக்கோபு தன் எத்தனையாவது வயதில் யோசேப்பை பெற்றிருப்பான்?
3. அண்ணன், தம்பிக்குள் சண்டை; நிரந்தரமில்லை; அப்பாவின் அடக்கத்தில் இணைந்தே காரியம் செய்தனர். அந்த தகப்பனார் இருவர் யார்?
2. ஆண் மற்றும் பெண் பெயராக பயன்படுத்தப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பெயரை எழுதுக.
1. சரீர சுத்தி உண்டாகும்படி பரிசுத்தப்படுத்துவது எவை?
0 Comments