அன்பானவர்களே... அன்பின் வாழ்த்துகள்... தவக்காலம் நமக்கு கிடைத்த பாக்கிய நாள்கள். இந்த நாள்களில் நாம் திருமறையை அதிகமாக தியானித்து, நம்மை சோதித்தறிந்து ஜெபிக்கும் நாள்கள். இந்த நாள்களில் "மேயேகோ திருமறை வினாடி வினா " (Meyego Scripture Bible Quiz) நடத்த முயற்சிக்கிறோம். இது இன்னும் அனைவரின் வேத தியானத்தை ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்.
விதிமுறைகள்
1. பரிசுத்த வேதாகமம் முழுவதும் மட்டும். கேள்வி - பதில் முறையில் வினாக்கள் இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு வினா என 40 வினாக்கள்.
2. மார்ச் 05 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 வரை தினமும் ஒரு கேள்வி மேயேகோ வலைத்தளத்தில் பதிவிடப்படும். லிங்க் அனுப்பப்படும். அந்த நாளுக்கான கேள்வியின் பதிலை ஒரு A4 பேப்பரில் எழுதி வரவும் (பதில் & இருப்பிடம்).
3. மார்ச் 5 முதல் ஏப்ரல் 20 வரை என 40 கேள்வி - பதில்கள் வரும். 40 நாள்கள் முடிவில், அந்த பதில்களை கீழ்க்கண்ட முகவரிக்கு போஸ்ட் மூலம் அனுப்பி வைக்கவும்.
4. முகவரி:
மேயேகோ
சி.எஸ்.ஐ. தூய மேரி ஆலய வளாகம்
இராமையன்பட்டி - 627358
திருநெல்வேலி. தமிழ்நாடு.
📞 9486 810 915
5. அனுப்ப வேண்டியவை:
பதில் எழுதிய பேப்பர்
உங்கள் பெயர்
ஃபோன் எண் அல்லது இமெயில் ஐடி
முழு முகவரி.
6. உங்கள் பதில் உள்ள போஸ்ட் ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் வர வேண்டும். தாமதமாக வரும் பதில் ஏற்றுக் கொள்ளப்படாது.
7. சரியாக எழுதியவர் மற்றும் பங்கு பெற்றோர் என்று "இரண்டு விதத்தில் பரிசுகள்" உண்டு. குலுக்கல் முறையில் 2 நபர்களுக்கு பரிசு வழங்கப்படும். முழு மதிப்பெண்கள் பெறாவிட்டாலும், நீங்கள் அனுப்பினால் பங்கு பெற்றோருக்கான பரிசு குலுக்கல் முறையில் உண்டு. ஆகவே நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
பதிவு கட்டணம் ஏதும் இல்லை. முடிந்தவரை பாராமல், கூகுள் மற்றும் மற்றவரின் உதவியின்றி உங்கள் வேத அறிவை இந்த லெந்து காலத்தில் சோதித்துப் பார்க்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுங்கள். இறையாசி உங்களோடிருப்பதாக. ஆமென்.
0 Comments