Ad Code

டீன் ஏஜ் ஆலோசனை • சரீரத்தை பராமரிக்க பழகிக்கொள் • Prioritising in Teens Life

Hai Dear Teens
முன்னுரிமை எதற்கு? Series இல் முதல் பகுதி மனதை ஆள பழகிக் கொள் பற்றி நீங்க வாசித்தீங்களா? இப்போ இரண்டாவது பார்க்கப் போவது, 
சரீரத்தை பராமரிக்க பழகிக்கொள்
சரீரம் (உடல்) மற்றும் ஆன்மிகம் (ஆத்துமா/ஆவி) இரண்டும் ஒன்றோடொன்று பிணைந்தவை, இவை பேணப்பட வேண்டியது அவசியம். சரீரம் இன்றி இவ்வுலகில் வாழ்வது கடினம். 

அனேகமான நவீன காரியங்கள், புதிய வாழ்க்கை முறைமைகள், உன்னைக் கவரும் பருவம் தான் இந்த டீன் ஏஜ். இன்றைய Social Media, அது சரி இது சரி, 21 நாள்கள் இதை செய், 30 நாளில் இந்த மாற்றம் என்று உன்னை கவரும் விதம் பல விளம்பரங்கள் செய்யும். ஆனால் கடவுள் உனக்கு கொடுத்த ஞானம் எது சரி என்பதை பகுத்தறியவே...

எதை உண்கிறாய்?
எதை உடுக்கிறாய்?
எதை உணர்கிறாய்?

இந்த கேள்விகளுக்கு உன் பதில் என்ன?

நாம் வாழும் அவரச உலகில் அவசர உணவு (Fast Food) இப்போ ரொம்ப ட்ரெண்டிங். ஆனால், பெயருக்கு ஏற்றாற் போல், உடலுக்கும் அதிவிரைவில் தீங்கு விளைவிக்கும். இந்த வயதில் அதிக வளர்ச்சிதை மாற்றங்கள் உடலில் உனக்கு நடைபெறுவதால், சத்தான உணவுகள் சாப்பிடுவது மிகவும் அவசியம். காய்கறிகளை உன் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள். காலை உணவை தவிர்த்து விடாதே. மிக முக்கியமானது தினமும் நேரத்திற்கு சாப்பிட பழகிக் கொள்.

இன்று ட்ரெண்ட்டிங் என்ற பெயரில் சரீரத்தை உடல் நலக்குறைவுக்கு உள்ளாக்கி விடாதே. தரமான காட்டன் ஆடைகளை அணிவது, நாகரீகமற்ற செயல் அல்ல என்பதை உணர்ந்து கொள். வெளியே செல்லும் போது, நேர்த்தியான (Decent) ஆடை அணிந்து செல்; அது உனக்கு இன்னும் மதிப்பை கூட்டும். வீட்டில் இருக்கும் போது மற்றும் தூங்கும் போது, வசதியான (Comfortable, Traditional, cotton) ஆடைகள் அணிவது நன்று. ஆரோக்கியமான ஆடை, சரியான வாசனை திரவியங்கள், மற்றும் அடிப்படை தேவைக்கான பொருள்களை, உடல்நல நோக்கத்தோடு, வாங்கி பயன்படுத்தப் பழகிக்கொள். 

சரீரத்தின் உணர்வுகள் இந்த வயதில் மேலோங்குவது இயல்பு. ஆனால் அதை பராமரிக்க பழகிக் கொள். சரீரத்தின் அவயவங்களை பரிசுத்தமாக வைக்காவிடில் ஆன்மிக வாழ்வு பாதிக்கப்படும். இந்த வயதில் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதை விட, அவற்றை உயர்தரமான லட்சியங்களை நோக்கி செயல்படுத்துவது புத்திசாலித்தனம். நடை பயிற்சி, உடற்பயிற்சி, பொது விளையாட்டு, தியானம் போன்றவை உடலுக்கு நன்மை பயக்கும். சரீரத்தின் உணர்வுகளை மேற்கொள்ள, எப்போதும் நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.

ஏன்டா சரீர பராமரிப்பு குறித்து இவ்வளவு என்று யோசிக்கிறாயா? சரீர ஆரோக்கியம் மற்றும் தூய்மை, ஆன்மிக வாழ்வின் வளர்ச்சிக்கு மிக அவசியம் என்பதை உணர்ந்து கொள்.

"அழகான சரீரம் என்பதை விட, ஆரோக்கியமான சரீரம் என்பது தான் முக்கியம்.
கவர்சியான சரீரம் என்பதை விட 
கற்புள்ள சரீரம் என்பது தான் முக்கியம்"

பகுதி 3: ஆத்துமாவைக் காக்க பழகிக்கொள்

Post a Comment

0 Comments