Ad Code

டீன் ஏஜ்ல எதற்கு முன்னுரிமை? Prioritising in Teens Life • மனதை பழகிக் கொள். Meyego Nouthesia

Dear Teens,

எப்படி இருக்கீங்க, இந்த காலம் (Teens 13 to 19 age) வாழ்க்கையின் அருமையான காலம். நிறைய மாற்றம் மற்றும் வளர்ச்சியை நீங்கள் சந்திக்கிற காலம் இது. மிகவும் மகிழ்ச்சியாக நீங்கள் அனுபவித்து கடக்க வேண்டிய பருவம் இது. அதுக்கு நீங்க என்ன பண்ணனும்? வாங்க பார்போம்..

எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பது தான், இந்த டீன் ஏஜ்ல சவால் நிறைந்த ஒன்று. இதை கருத்தில் கொண்டு செயல்பட்டாலே வாழ்க்கை ஜொலிக்கும்.

முதலில், மனதை ஆள பழகிக்கொள்.....
இந்த டீன் ஏஜ்ல, மனம் நிலையாக இருப்பது கடினம். காரணம் என்ன? சிறுவயதில் இருந்து இளம் பருவம் அடையும் போது இயற்கையாக நடைபெறும் மாற்றங்கள் மற்றும் சமூக பழக்க வழக்கங்கள். இந்தச் சூழலில், உன் மனம் எப்படி இருக்கப் போகிறது?

மனம் உன் கையிலா, அல்லது மனதின் பிடியில் நீயா என்கிற குழப்பம் இருக்கும். இதில் நீ எதை தெரிவு செய்யப் போகிறாய்? 

ஹார்மோன்கள் வெறும் உடலை மட்டும் மாற்றாமல், மனநிலையையும் வெகுவாக தாக்கும். சில ஹார்மோன் மாற்றங்கள் மூலம் மனநிலை மாற்றங்கள் (Mood swings) ஏற்படும்.  

• "நான் பெரியவன் ஆகிவிட்டேன்" என்ற உணர்வு மேலோங்கும்.
• பெற்றோரின் கட்டுப்பாடுகளை விட, சொந்தமாக முடிவெடுக்க விரும்புவாய்.
• தனிமையை (Privacy) விரும்புவாய்; சில நேரங்களில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருக்கத் தோன்றும்.
• சட்டென்று கோபம் வருவது, அழுவது அல்லது மிகுந்த உற்சாகமடைவது போன்ற மாற்றங்கள் இயல்பானவை.
• தனது உருவத்தைப் பற்றியும், மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலையும் அதிகமாக இருக்கும்.
• சமூகத்தில் அல்லது நண்பர்கள் வட்டத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை (Identity) உருவாக்க முயற்சிப்பாய்.

இந்தச் சூழ்நிலைகளை கையாளப் பழகிக் கொள். உன் உணர்ச்சிகளைக் கையாளக் கற்றுக்கொள். 

மூளையின் 'Prefrontal Cortex' (முடிவெடுக்கும் பகுதி) முழுமையாக வளர்ச்சியடையாத காலம் இது. அதனால் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் ஆபத்தான காரியங்களில் ஈடுபடத் தோன்றும். மனதில் தோன்றும் குழப்பங்களை பெற்றோர் அல்லது நல்ல நண்பனிடம் தயக்கமின்றிப் பேச வேண்டும். குறுக்கு வழியில் அல்லது சமூக வலைதளங்களில் தீர்வு காண முயலக்கூடாது. 
1. நிதானமான யோசி
2. உடனடியாக எதிர்வினை ஆற்றாதே. (Don't react soon)
3. தகுந்த ஆலோசனை கேள்.
இந்த வயதில் அலைபாயும் மனம் போன போக்கில் போய் விடாதே. உன்னால் மட்டும் இதை செய்ய கடினம். மனதை படைத்த கடவுளின் வார்த்தையால் மனதை நிரப்பி விடு. அவர் வார்த்தைக்கு எந்த மனமும் கட்டுப்படும். கடவுளின் உதவியோடு மனதை நீ ஆளப் பழகிக் கொள்வாய். 
பகுதி 2 இல் சரீரத்தை பராமரிக்க பழகிக்கொள் கட்டுரை வரும்.
எழுதியவர்
மேயேகோ
11.03.2026

For the Academic & Career Guidance 
www.meyego.in

Post a Comment

0 Comments