திருமறையில் யார் இவர் யாரோ? -
சிமியோன்: காத்திருந்தவர்
1. பெயர்: சிமியோன் Simeon of Jerusalem
2. அர்த்தம்: கேட்பவர் அல்லது கவனமாகக் கேட்பது
3. சிறுகுறிப்பு:
• எருசலேமில் வாழ்ந்த ஒரு நீதியும் தேவபக்தியும் உள்ள லேவிய முதியவர்.
• பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டவர்
• மேசியாவைக் காணும் வரை மரணமடைய மாட்டார் என்ற வாக்கு பெற்றவர்
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
இஸ்ரயேலின் ஆறுதலுக்காகக் காத்திருந்த சிமியோன் கடவுளால் வாக்களிக்கப்பட்ட மேசியாவைப் பார்க்கும் வரை மரணமடைய மாட்டார் என்று பரிசுத்த ஆவியானவரால் உணர்த்தப்பட்டார். அடிமைத்தனத்திலும், உரோமையரின் ஆதிக்கத்திலும் இருந்த மக்களுக்கு மீட்பே உண்மையான ஆறுதலாக இருந்தது. சிமியோன் அந்த மீட்பிற்காகவே தன் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தார். பொறுமையோடு காத்திருந்து குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டபோது, அவரைத் தன் கைகளில் ஏந்தி கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
லூக்கா 2: 25 - 32
லூக்கா 2: 29 -32 சிமியோன் கீதம் (Nunc Dimittis)
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments