Church Dedication Festival Worship Order (Revised)
1. முகவுரை பாடல்
தேவனே யேசு நாதனே - இத்
தேவ ஆலயம் வந்திடும்
தேவ ஆலயம் வந்தவர்க்கருள்
திவ்ய ஆவியை ஈந்திடும்
2. முகவுரை வசனம்
கர்த்தருடைய வீட்டிலும், நமது கடவுளுடைய ஆலயப் பிராகாரங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள். (சங்கீதம் 135.2)
கடவுளுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சந்தோஷமாய்க்
கொண்டாடினார்கள். (எஸ்றா 6:16)
கர்த்தருடைய மகிமை கடவுளுடைய ஆலயத்தை நிரப்பிற்று. (1 நாளா 5:14)
3. ஆரம்ப ஜெபம்
4. ஆரம்ப பாடல்
(நின்றவண்ணமாக பிரார்த்தனை செய்வோமாக...)
5. பின்வரும் சங்கீத தொகுப்பை முறையாக வாசிப்போம்
குரு: கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது. (சங்: 11.6 )
சபை : எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார். . (சங் 18:06 )
குரு : அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம். (சங் 132:07 )
சபை : என்ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மேல்
வாஞ்சையிம் தவனமுமாயிருக்கிறது.(சங் 84:02 )
குரு : கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய்ப் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுவோம். . (சங் 118:27 )
சபை : நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய
ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும், கர்த்தருடைய ஆலயத்தின்
பிரகாரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன்.
அல்லேலூயா. (சங் 116:18,19)
குரு: எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு
நன்மையுண்டாகத் தேடுவேன். (சங் 122:09 )
சபை : கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள்
தேவனுடைய பிரகாரங்களில் செழித்திருப்பார்கள். (சங் 92:13 )
குரு : கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயப் பிரகாரங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள். (சங் 135 :02)
சபை : எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து
ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா. (சங் 135:21 )
குரு : பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமையுண்டாவதாக
சபை: ஆதியிலும், இப்பொழுதும், எப்பொழுதுமான சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
6. கட்டளைகள்
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னதாவது:
நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்; உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுமனதோடும், உன் முழு பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால் உன்னிடத்தில் நீ அன்புகூருவது போல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்பதே.
கர்த்தாவே எங்களுக்கு இரங்கி,
கருத்துடன் இந்தப் பிரமாணத்தைக்
கைக்கொள்ள இதயத்தை ஏவியருளும்.
6. பிழையுணர அழைப்பு
கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார், கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது, அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது, அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது. (சங்கீதம் 11.4)
அன்றைக்கு தீர்க்கர் ஏசாயா, ஆண்டவரின் ஆலயத்திற்குள் சென்றவுடன், தூயாதி தூயவராம் கடவுளின் முன்னிலையில் தன்னிலை உணர்ந்து, தன்னைத் தாழ்த்திக் கொண்டார். அதுபோலவே, இன்றைக்கும் இறைவனின் வீட்டில் நிற்கும் நாமும் கடவுளின் திருவுளத்திற்குப் கீழ்ப்படிய, நமது பாவங்களையும் பலவீனங்களையும் உணர்ந்து, முழங்கால்படியிட்டு, மனத்தாழ்மையுடன் அறிக்கை செய்வோமாக.
(முழங்காலில்)
6. பாவ அறிக்கை ஜெபம்
அனைவரும்: மனதுருக்கத்தின் ஆண்டவரே, உமக்கு விரோதமாகவும் , எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு
விரோதமாகவும் பாவம் செய்துள்ளோம் என்று அறிக்கையிடுகிறோம். கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லியும் தீமையைவிட்டு விலகவில்லை. இயேசு
கிறிஸ்து காட்டிய நீதி வழியில் உம்மை நாங்கள் உண்மையாகப் பின்பற்றவில்லை. உம்முடைய விடுதலை அருட்பணியில் இவ்வுலகில் உம்மோடு நாங்கள் சேர்ந்து செயலாற்றவில்லை என்றும் அறிக்கையிடுகிறோம். கிருபை நிறைந்த ஆண்டவரே உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் பாவமற எங்களைச் சுத்திகரியும். உம்முடைய பரிசுத்த ஆவியினால் விடுதலை பெறவும், புது ஜீவன் உள்ளவர்களாய்
வாழவும், உம்மோடு, சக மனிதரோடும் சமாதானத்தோடு வாழவும் அருள்புரிந்தருளும். ஆமென்.
7. பாவ விமோசனம்
குரு: நம்முடைய பரம பிதாவாகிய சர்வ வல்லமையுள்ள கடவுள், உத்தம மனஸ்தாபத்தோடும் உண்மையான விசுவாசத்தோடும் தம்மிடத்திற்கு மனந்திரும்பி, தங்கள் சகோதர, சகோதரிகளின் குற்றங்களை மன்னிக்கிற யாவருக்கும் பாவமன்னிப்பை அருளிச்செய்வோம் என்று மிகுந்த இரக்கமாய் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அவர் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் உங்களுக்கு இரங்கி, உங்களுடைய பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து அவைகளினின்று உங்களை விடுதலையாக்கி, சகல நன்மையிலும் உங்களை உறுதிப்படுத்தி, நிலைநிறுத்தி, உங்களை நித்திய ஜீவ கரையில் சேர்ப்பாராக.
சபை: ஆமென், தேவரீருக்கே, ஸ்தோத்திரமுண்டாவதாக.
8. குரு: கர்த்தர் உங்களோடிருப்பாராக.
சபை: கர்த்தர் உமாதாவியோடும் இருப்பாராக.
(நாம் யாவரும் எழுந்து நின்று பண்டிகை கீதத்தை பாடுவோம்)
9. பண்டிகை கீதம்
கர்த்தர் சிருஷ்டித்த ....
10. முறைமை சங்கீதம்: 84 சங்கீதம்
பிதாவுக்கும்....
11. நன்றி பலிகள்
1. நமது ______________ (ஊர் பெயர்) திருச்சபை ஆரம்பிக்கப்பட்ட ___________ ஆண்டு முதல் இன்று வரை ___________ ஆண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக வழிநடத்திவரும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோமாக.
சபை: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
2. நமது ............ சபை (ஊர் பெயர்) உருவாக்கப்பட்ட கடவுள் பயன்படுத்திய ............... (மிஷனரிகள் பெயர்கள்) அவர்களின் ஊழியங்களுக்காகவும், சபை வளர்ச்சி பணியில் ஈடுபட்ட அனைத்து இறை மக்களுக்காகவும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோமாக.
சபை: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
3. நமது சபையில் நடைபெறுகின்ற ஞாயிறு பாடசாலை, வாலிபர் ஐக்கிய சங்கங்கள், பெண்கள் ஐக்கிய சங்கம், ஆண்கள் ஐக்கிய சங்கம், ஜெபகுழுக்கள் மற்றும் பாடகர் குழு ஊழியர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோமாக.
சபை: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
4. நமது சபையின் ஆன்மிக வளர்ச்சிக்கும், ஆலயப் பராமரிப்புப் பணிகளுக்கும் தேவையான வசதிகளை அளித்து, கர்த்தருடைய ஆசீர்வாதங்களினால் நம்மை பெருகப்பண்ணிய ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோமாக.
சபை: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
5. நமது சபையில் அங்கத்தினராக இருக்கின்ற _____ குடும்பங்களையும் ஆசீர்வதித்து பராமரித்து வருகின்ற ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோமாக.
சபை: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
நன்றிப்பாடல்:
12. விண்ணப்பங்கள்
1. நமது தென்னிந்தியத் திருச்சபை பிரதம பேராயர் ____________ ஐயா அவர்கள், நமது பேராயர் _____________ ஐயா அவர்கள், நமது சேகர ஆயர் ____________, நமது சபை ஊழியர் _____________, மற்றும் ஆலய பணியாளர் ___________ ஆகியோருக்காகவும், அவர்களின் ஊழியத்திற்காவும் சபைக்கு ஆண்டவர் கொடுத்துள்ள கடவுளை நோக்கி ஜெபிப்போமாக.
சபை: ஆண்டவரே, எங்கள் விண்ணப்பம் உம்மிடத்தில் சேர்வதாக.
2. நமது சபையின் ஆலய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவருக்காகவும், சபையின் ஒருமைப்பாட்டிற்காகவும், ஆலய வளர்ச்சிப் பணிகளுக்காகவும் கடவுளை நோக்கி ஜெபிப்போமாக.
சபை: ஆண்டவரே, எங்கள் விண்ணப்பம் உம்மிடத்தில் சேர்வதாக.
3. நம்முடைய ஆலயத்தின் மூலமாக நடைபெறும் நற்செய்தி பணிகளுக்காகவும், சமூக சேவைகளுக்காகவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போமாக.
சபை: ஆண்டவரே, எங்கள் விண்ணப்பம் உம்மிடத்தில் சேர்வதாக.
4. நமது ____________ ஊரில் வாழும் அனைத்து மக்களுக்காகவும், நமது ஊரிலிருந்து சென்று வெளியிடங்களில் வாழும் அனைவரின் நல்வாழ்வுக்காகவும் கடவுளை நோக்கி ஜெபிப்போமாக.
சபை: ஆண்டவரே, எங்கள் விண்ணப்பம் உம்மிடத்தில் சேர்வதாக.
5. வறுமையில் வாடுவோர், வியாதில் கடினப்படுவோர், மற்றும் தனிமையில் இருப்போர் ஆகியோருக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டுமென்று கடவுளை நோக்கி ஜெபிப்போமாக.
சபை: ஆண்டவரே, எங்கள் விண்ணப்பம் உம்மிடத்தில் சேர்வதாக.
13. பண்டிகை சுருக்க ஜெபம்
14. பழைய / நிருப வாசகம்
இது ஆண்டவரின் திருவார்த்தை"
ஸ்தோத்திரம் உண்டாவதாக - தேவரீருக்கே
ஸ்தோத்திரம் உண்டாவதாக
(எழுந்து நின்று)
15. நற்செய்தி வாசகம்
"இது கிறிஸ்துவின் நற்செய்தி"
மகிமையே உண்டாவதாக - கிறிஸ்துவுக்கே
மகிமையே உண்டாவதாக
16 நிசேயா விசுவாச பிரமாணம்
17. பிரசங்க ஆயத்தப் பாடல்
18. பிரசங்கம்
19. காணிக்கை பாடல்
20. காணிக்கை ஜெபம்
பரிசுத்த பிதாவே, உமது கிருபாசனத்தண்டையில் பிரவேசிப்பதற்குப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை உமது அருமையான குமாரனின் இரத்தத்தினால் எங்களுக்கு உண்டு பண்ணினீரே; நாங்கள் அபாத்திரராயினும் அவர் மூலமாக உம்மண்டை வருகிறோம். எங்களையும் இந்தக் காணிக்கையையும், உம்முடைய நாம மகிமைக்காக அங்கிகரித்து உபயோகிக்கும்படியாக, தாழ்மையோடு வேண்டிக் கொள்ளுகிறோம். வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள். உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுக்கிறோம். ஆமென்.
21. சமாதான வாழ்த்துதல்
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, கிறிஸ்துவின் திருப்பந்தியில் சேர இருக்கும் நாம், நமது ஒருமைப்பாட்டை சமாதான வாழ்த்துதல் மூலம் வெளிப்படுத்துவோமாக.
(ஒருவருக்கொருவர் "ஷாலோம் / சமாதானம் உண்டாவதாக" என்று சொல்லி வாழ்த்தலாம்)
22. இறைபிரசன்ன ஜெபம் (பாடல்)
(முழங்கால்படியிட்டு ஜெபம் செய்வோம்)
பிரதான குருநாதா பிரசன்னம் அருள்வீரே
பிரிய சீடர் நடுவிலே பிரசன்னமானவரே
பிதாவோடும் ஆவியோடும் பிணைந்தொரே தேவணய்
பிசகாதே அரசாளும் பெருந்தகையே அப்பமதைப்
பிட்கையிலே வெளிப்படுத்தும் ஆமென்.
23. பிரதான நன்றி ஜெபம்
ஆம் பிதாவே நீர் பரிசுத்தர். நீர் தோத்தரிக்கப்பட்டவர். தேவரீர் மனிதரில் உருக்கமாய் அன்புகூர்ந்து உமது ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்து எங்கள் தன்மையைத் தரித்துக் கொள்ளவும், சிலுவையில் மரித்து எங்களை மீட்டுக் கொள்ளவும், அவரைத் தந்தருளினீரே: அவர் சிலுவையில் ஒரே தரம் தம்மைத்தாமே ஏக பலியாக ஒப்புக்கொடுத்து சர்வ லோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்வதற்கு நிறைவும், பூரணமும், போந்ததுமான பலியையும், காணிக்கையையும், பரிகாரத்தையும் செலுத்தினதுமல்லாமல், தமது அருமையான மரணத்தை என்றைக்கும் நினைப்பூட்டும் ஞாபகத்தை நியமித்து, தாம் திரும்ப வருமளவும், நாங்க அதை அனுசரித்துவரும்படி, தமது பரிசுத்த சுவிசேஷத்தில் கட்டளையிட்டருளினாரே;
அவர் தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே, அப்பத்தை எடுத்து தோத்திரம் பண்ணி, அதைப்பிட்டு சீஷர்களுக்குக் கொடுத்து, “நீங்கள் வாங்கிப் புசியுங்கள். இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம்: என்னை நினைவு கூறும்படி இதைச் செய்யுங்கள் ” என்றார்.
அப்படியே போஜனம் பண்ணின பின்பு, அவர் பாத்திரத்தையும் எடுத்து தோத்திரம் பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: “நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள்: இது பாவமன்னிப்பு உண்டாகும்படி உங்களுக்காகவும் அநேகருக்காகவும் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தம்; இதைப் பானம் பண்ணும்பொழுதெல்லாம் என்னை நினைவு கூறும்படி இதைச் செய்யுங்கள்” என்று திருவுளம்பற்றினார். ஆமென்.
கர்த்தா உம் மரணத்தை நினைவு கூர்ந்து
களிப்புடன் உயிர்த்ததை அறிக்கை செய்து
காத்திருப்போம் உம் வருகைக்காக
காசினியில் உம்மைத் தோத்தரிப்போம்
24. பிரதிஷ்டை ஜெபம்
இரக்கமுள்ள பிதாவே, நாங்கள் பிட்கிற அப்பம், கிறிஸ்துவினுடைய ஐக்கியமாயும், நாங்கள் ஆசீர்வதிக்கிற பாத்திரம், கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கும்படி எங்களையும், நீரே தந்த இந்த அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் உமது பரிசுத்த ஆவியால் பரிசுத்தப்படுத்த வேண்டுமென்று மிகுந்த தாழ்மையோடு பிராத்திக்கிறோம். நாங்களெல்லாரும் எங்கள் ஆண்டவர் கிறிஸ்துவில் கூட்டி இணைக்கப்பட்டவர்காளாகி, விசுவாசத்தில் ஒருமைப்படவும், தலையாகிய அவருக்குள் எல்லாவற்றிலேயும் வளரவும் கிருபை செய்யும். அவரோடும் பரிசுத்த ஆவியோடும் ஐக்கியமாயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய உமக்கு, அவர் மூலமாய் சகல கனமும் மகிமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்.
25. கர்த்தருடைய ஜெபம்
(நமது இரட்சகராகிய கிறிஸ்து கற்பித்தபடி அவரில் நமக்கு அருளப்பட்ட தைரியத்தோடே சொல்லுவோமாக.)
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக. அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு விரோதமாய்க் குற்றம் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களை சோதனைக்குள் பிரவேசிக்கப் பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.
26. தாழ்மையின் பிரவேச ஜெபம்
இரக்கமுள்ள கர்த்தாவே, எங்கள் சுயநீதியை நம்பி நாங்கள் உம்முடைய பந்தியில் சேரத்துணியாமல் தேவரீருடைய அளவற்ற இரக்கத்தையே நம்பிச் சேருகிறோம். உம்முடைய மேஜையின் கீழ் விழும் துணிக்கைகளையும் பொறுக்கிக் கொள்ள நாங்கள் பாத்திரர் அல்ல. ஆனாலும் தேவரீர் எப்பொழுதும் இரக்கஞ்செய்கிற இலட்சணமுடைய மாறாத ஆண்டவராயிருக்கிறார். ஆகையால் கிருபையுள்ள கர்த்தாவே, உமது அருமையான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் விலைமதியாத சரீரத்தாலும் இரத்தத்தாலும் எங்கள் பாவமுள்ள சரீரமும், ஆத்துமாவும் சுத்தமாகி எப்பொழுதும் நாங்கள் அவருக்குள்ளும் அவர் எங்களுக்குள்ளும் வாசமாயிருப்பதற்கு ஏற்றவிதமாய் அவருடைய சரீரத்தைப் புசித்து அவருடைய இரத்ததைப் பானம் பண்ண எங்களுக்குக் கிருபை செய்தருளும். ஆமென்.
27. அப்பம் பிட்குதல்
குரு: நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?
ஜெகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற
தேவாட்டுக்குட்டியே எங்களுக்கிரங்கும்
தேவா சமாதானம் தாரும்
தேவாட்டுக்குட்டியே எங்களுக்கிரங்கும்
தேவா சமாதானம் தாரும்
28. நற்கருணை பந்தி
• உங்களுக்காகப் பிட்கப்பட்ட கிறிஸ்துவின் சரீரம்
• உங்களுக்காக சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தம்
29. நன்றி ஜெபம் / பாடல்
என் ஆத்துமாவே.....
30. நிறைவு ஜெபம்
31. ஆசீர்வாதம்
எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்களோடே இருந்து நீங்கள் கடவுளையும் அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவிலும், அன்பிலும் நிலைத்திருக்கும்படி உங்கள் இருதயத்தையும் சிந்தையும் காக்கக் கடவது. பிதா, குமாரன் பரிசுத்த ஆவியுமாகிய சர்வ வல்லமை பொருந்திய தேவனுடைய ஆசிர்வாதம் உங்களுக்குள்ளே இருந்து, எப்பொழுதும் உங்களோடே நிலைத்திருக்கக்கடவது. ஆமென்.
32. முடிவு கவி
33. பின்னுரை

0 Comments