Ad Code

காயு (தெர்பை) Gaius of Derbe Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 101
காயு: பின்னணியில் ஊழியம்

1. பெயர்:  
காயு (தெர்பை) Gaius of Derbe

2. அர்த்தம்: 
மகிழ்ச்சியடைகிறவர்

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 20:4 – "ஆசியாவரைக்கும் அவனுடனேகூடப்போனவர்கள், ஆசியா தேசத்தானான சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தார்க்குவும், செகுந்துவும், தெர்பையானான காயுவும், தீமோத்தேயும், ஆசியா தேசத்தாரான தீகிக்கும், துரோப்பீமுமே."

4. வரலாற்றுக் குறிப்புகள்
• காயு கலாத்தியா நாட்டின் 'தெர்பை' (Derbe) என்ற பட்டணத்தைச் சேர்ந்தவர். அப்போஸ்தலனாகிய பவுல் தனது முதலாவது மற்றும் இரண்டாவது ஊழியப் பயணங்களின்போது இந்தப் பட்டணத்திற்குச் சென்றிருந்தார் (அப் 14:6, 16:1).
• பவுலின் ஊழியத் தோழர்: பவுல் தனது மூன்றாம் சுவிசேஷப் பயணத்தை முடித்து எருசலேமுக்குத் திரும்பும்போது, மக்கெதோனியாவிலிருந்து ஆசியா வரை அவரோடு உடன் பயணம் செய்த உண்மையுள்ள சீடர்களில் காயுவும் ஒருவர்.
• சபையின் பிரதிநிதி: எருசலேமிலுள்ள ஏழைப் பரிசுத்தவான்களுக்குச் சேகரிக்கப்பட்ட காணிக்கையைக் கொண்டு செல்வதிலும், அஞ்ஞானிப் பின்னணியிலிருந்து வந்த சபைகளின் ஒருமைப்பாட்டைக் காட்டுவதிலும் தெர்பை சபையின் சார்பில் காயு பவுலோடு இணைந்து செயல்பட்டார்.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
விவிலியத்தில் காயுவைப் பற்றி அதிகமான அதிகாரங்களோ அல்லது பெரிய பிரசங்கங்களோ எழுதப்படவில்லை. ஆனால், தேவ ஊழியரின் கரங்களைப் பலப்படுத்தும் உண்மையுள்ள "கூட்டுப் பணியாளராக" (Team Player) அவர் இருந்தார்.
நாமும் மேடைகளிலோ அல்லது பிறர் புகழும் இடங்களிலோ மட்டுமே பணியாற்ற வேண்டும் என்றில்லாமல், பின்னணியில் இருந்து உண்மையாகவும் அமைதியாகவும் சேவை செய்ய வேண்டும்.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Post a Comment

0 Comments