அருட்திரு முனைவர் எம். தாமஸ் தங்கராஜ் (Rev. Dr. M. Thomas Thangaraj (1942 - 2026) சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்தியக் கிறித்துவ இறையியலாளர், பேராசிரியர் மற்றும் ஆன்மீகப் பாடலாசிரியர் ஆவார். திருநெல்வேலி திருமண்டலத்தின் அறிவுசார் சிற்பிகளில் ஒருவராக விளங்கும் இவர், இந்தியச் சூழமைவு இறையியலையும் சமயங்களுக்கு இடையேயான உரையாடல்களையும் உலகளவில் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்.
1. கல்வி மற்றும் ஆன்மீகப் பயணம்:
எம். தாமஸ் தங்கராஜ் தென் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர். பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் அறிவியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், செராம்பூர் கல்லூரியில் இறையியல் இளங்கலைப் பட்டமும் பெற்றார். தொடர்ந்து பெங்களூரு ஐக்கிய இறையியல் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் திவ்வியப் பள்ளியில் முனைவர் பட்டமும் பெற்றார்.
2. பேராசிரியத்துவம் மற்றும் உலகளாவிய பங்களிப்பு
திருநெல்வேலி திருமண்டலத்தில் போதகராகவும், பின்னர் இறையியல் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
தமிழ்நாட்டு இறையியல் கல்லூரியில் (TTS, Madurai) போதகராகவும் ஆசிரியராகவும் பணியாற்றிய இவர், 1988-இல் அமெரிக்காவிற்குப் பயணித்தார். அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தின் கேண்ட்லர் இறையியல் பள்ளியில் உலகளாவிய கிறித்துவப் பேராசிரியராக 20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
3. முக்கிய நூல்கள் மற்றும் சிந்தனைகள்
இந்திய பண்பாட்டையும் கிறித்துவக் கோட்பாடுகளையும் இணைக்கும் குறுக்கு-பண்பாட்டு இறையியலில் இவரது ஆய்வுகள் உலகளவில் கவனம் பெற்றன.
கிறித்துவ இறையியலை மேலைநாட்டுக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்காமல், தமிழ் தத்துவச் சூழலில் (குறிப்பாக 'குரு' என்ற கருத்தாக்கத்தின் வழியே) விளக்கிய அவரது தனித்துவத்தை பாராட்ட வேண்டும்.
• த குருசிஃபைட் குரு (1994): இயேசு கிறிஸ்துவை இந்திய ஆன்மீகச் சூழலில் "சிலுவையில் அறையப்பட்ட குரு" என்ற படிமத்துடன் விளக்கும் முதன்மை ஆய்வு நூல்.
• ரிலேட்டிங் டு பீப்பிள் ஆஃப் அதர் ரிலீஜியன்ஸ் (1997): பிற சமயத்தைச் சார்ந்தவர்களுடன் பரஸ்பர அன்போடும் திறந்த மனதோடும் உரையாடுவதற்கான வழிகாட்டி நூல்.
• த காமன் டாஸ்க் (1999): உலகளாவிய மனிதநேயம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கிறித்துவத் தொண்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நூல்.
4. பாடல்கள்
அத்துடன், கர்நாடக இசை மற்றும் தமிழ் மரபுசார் மெட்டுகளில் இவர் இயற்றிய வழிபாட்டுப் பாடல்கள், ஆன்மீகத்தையும் தமிழ் இசையையும் ஒருங்கிணைத்த கலைப் பொக்கிஷங்களாகும்.
தென்னிந்திய திருச்சபைகளின் (CSI) வழிபாடுகளில் பயன்படும் பல தமிழ் ஆன்மீகப் பாடல்களையும் கீர்த்தனைகளையும் இவர் இயற்றியுள்ளார். தமிழ் மொழியின் வழியே ஆன்மீகத்தை எளிமையாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்துவது இவரது பாடல்களின் சிறப்பாகும்.
5. இறுதிக்காலம்
ஓய்வுக்குப் பிறகு போஸ்டன் பல்கலைக்கழகத்திலும் விருந்துப் பேராசிரியராகத் தொண்டாற்றினார். மேலும், பாளையங்கோட்டையில் உள்ள பிஷப் ஸ்டீபன் நீல் ஆராய்ச்சி மையத்தின் செயல்பாடுகளிலும் முக்கிய பங்காற்றினார். இறைவனுக்காக உழைத்த இவர் தன் 84 ஆம் வயதில் 30.08.2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
நிறைவாக...
தமிழ் வழிகாட்டலும் கீர்த்தனைகளும்
இறையியல் பேராசிரியராக மட்டுமன்றி, சிறந்த பாடலாசிரியராகவும் இவர் வாழ்ந்ததால் இன்னும் மக்கள் மனங்களில் வாழ்கிறார்.
நெல்லைப் பேராயத்தின் முன்னாள் ஆயர்
"வளர்ந்து பெருகுக" பாடலுக்குச் சொந்தக்காரர்
செராம்பூர் முன்னாள் மாணவர்
தூய யோவான் கல்லூரி மாணவர்
"நெல்லை மண்ணில் இவருக்கு அடுத்து இவரை விடச் சிறந்த இறையியல் கல்லூரி பேராசிரியர் எழும்பவில்லை என்றே கூறலாம்."
மேயேகோ
9486810915

0 Comments