Ad Code

CSI திருநெல்வேலி திருமண்டல லோகோ Tirunelveli Diocese Logo Photo & History


திருநெல்வேலி திருமண்டலத்தின் லோகோ (Coat of Arms), 1896-ஆம் ஆண்டு இங்கிலாந்து திருச்சபையால் (Anglican Church) இத்திருமண்டலம் உருவாக்கப்பட்ட காலத்தில் வடிவமைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னமாகும். 1947-ல் தென்னிந்திய திருச்சபை (CSI) அமைக்கப்பட்ட பிறகும், இத்திருமண்டலம் தன் பாரம்பரிய அடையாளமாக இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

1. ஆயர் மகுடம் (Bishop's Mitre):
சின்னத்தின் உச்சியில் ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட 'ஆயர் தலைக்கவசம்' (Mitre) இடம்பெற்றுள்ளது. இது அப்போஸ்தல பாரம்பரியத்தைக் (Apostolic and Episcopal Tradition) குறிக்கிறது. 

2. சிவப்பு நாடா (Infulae):
மகுடத்திலிருந்து இருபுறமும் தொங்கும் சிவப்பு நாடாக்கள், பழைய ஏற்பாட்டு ஆசாரியத்துவ பாரம்பரியத்தையும் புதிய ஏற்பாட்டுத் திருச்சபைப் பணியையும் இணைக்கும் அடையாளமாகும். மேலும், மகுடத்தின் கீழ் இருபுறமும் தொங்கும் சிவப்பு நாடாக்கள் (Infulae) தெய்வீகப் பணியின் அடையாளமாகும்.

3. பாதுகாப்புக் கேடயம் (Shield):
தங்க நிற எல்லையைக் கொண்ட வெள்ளை நிறக் கேடய வடிவமைப்பு முழுச் சின்னத்தையும் தாங்கி நிற்கிறது. விசுவாசிகளின் ஆன்மீகப் பாதுகாப்பு, இறைவனின் அரண் மற்றும் வேதாகமச் சத்தியங்களின் மீதுள்ள உறுதியை இது குறிக்கிறது.

4. சிவப்பு சிலுவை ( Red Cross):
கேடயத்தின் மையப்பகுதியில் கம்பீரமாக அமைந்துள்ள சிவப்பு நிற லத்தீன் சிலுவை, கிறிஸ்துவ விசுவாசத்தின் மையப்புள்ளியாகும். இது இயேசு கிறிஸ்துவின் தியாகம், சிலுவை இரட்சிப்பு மற்றும் மனிதகுலத்தின் மீதான தேவ அன்பை உணர்த்துகிறது.

5. தாவர வகை:
நெற்கதிர் போன்ற தாவர வகை திருநெல்வேலி' (திரு + நெல் + வேலி) எனும் ஊர்ப் பெயரின் வரலாற்று அடையாளத்தை நேரடியாகப் பிரதிபலிக்கின்றன. "வளர்ந்து பெருக" என்னும் நோக்கத்தை உணர்த்துகிறது. 

6. இரண்டு கிடைமட்ட கோடுகள்
திருநெல்வேலி' (திரு + நெல் + வேலி) எனும் ஊர்ப் பெயருக்கு ஏற்ப, பயிர்களைச் சுற்றி அமைந்திருக்கும் பாதுகாப்பு வேலியாக இக்கோடுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அதாவது, மஞ்சள் நிற இரண்டு கோடுகளும் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய இரண்டும் பாதுகாப்பு வேலிகள் போல் உள்ளதைக் குறிக்கிறது.

7. வண்ணங்கள்
சிவப்பு: இயேசு கிறிஸ்துவின் தியாக இரத்தம், தேவ அன்பு மற்றும் தூய ஆவியின் வல்லமை.
பச்சை: ஆவிக்குரிய வளர்ச்சி, புது வாழ்வு, நம்பிக்கை மற்றும் நிலத்தின் வளம்.
தங்கம் / மஞ்சள்: இறைவனின் மகிமை, தெய்வீக வெளிச்சம் மற்றும் ஆசீர்வாதம்.
வெள்ளை: தூய்மை, பரிசுத்தம் மற்றும் கிறிஸ்துவின் சமாதானம்.

நிறைவாக...
இச்சின்னம் வெறும் லோகோவாக மட்டுமில்லாமல், திருநெல்வேலி மண்ணின் பண்பாட்டையும் கிறிஸ்தவ விசுவாசத்தையும் இணைக்கும் ஒரு வரலாற்றுச் ஆவணமாக விளங்குகிறது.C

SI Diocese of Tirunelveli Logo
Uploaded by 
Meyego 

Post a Comment

0 Comments