Ad Code

யாசோன் • Jason • Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 86
யாசோன்: ஆபத்திலும் ஊழியருடன்

1. பெயர்:  
யாசோன் • Jason

2. அர்த்தம்: 
சுகமளிப்பவர்

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 17:5-9: தெசலோனிக்கேயாவில் பவுலையும் சீலாவையும் தன் வீட்டில் உபசரித்ததற்காக யூதர்களின் எதிர்ப்பைச் சந்தித்தது மற்றும் அதிகாரிகளிடத்தில் பிணைத் தொகை செலுத்தியது.

ரோமர் 16:21: பவுல் தனது நிருபத்தில் யாசோனைத் தன் "இனத்தான்" என்று குறிப்பிட்டு, சபை மக்களுக்கு வாழ்த்து அனுப்புவது.

4. வரலாற்றுக் குறிப்புகள்
• யாசோன் தெசலோனிக்கே நகரத்தில் வாழ்ந்த ஒரு யூதக் கிறிஸ்தவர்.
• பவுலும் சீலாவும் இரண்டாம் சுவிசேஷப் பயணத்தின் போது தெசலோனிக்கே வந்தபோது, யாசோன் தன் வீட்டின் கதவுகளைத் திறந்து அவர்களுக்கு அடைக்கலம் அளித்தார்.
• பவுலின் பிரசங்கத்தைக் கண்டு பொறாமை கொண்ட யூதர்கள், கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு யாசோனின் வீட்டைத் தாக்கினர்.
• பவுல் அங்கு இல்லாததால், கோபமடைந்த கும்பல் யாசோனையும் சில சகோதரர்களையும் நகர அதிகாரிகளிடம் (Politarchs) இழுத்துச் சென்று, "இராயனுக்கு விரோதமாகச் செயல்படுகிறார்கள்" என்று குற்றம் சாட்டியது.
• யாசோன் அமைதியையும் தேவ ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய ஜாமீன் (பிணைத் தொகை) செலுத்தி, பவுலும் சீலாவும் இரவோடு இரவாக பெரோயாவுக்குப் பாதுகாப்பாகத் தப்பிச் செல்ல உறுதுணையாக இருந்தார்.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
அச்சுறுத்தல்களும் ஆபத்துக்களும் சூழ்ந்திருந்த போதிலும், இறை ஊழியர்களுக்கும் சுவிசேஷப் பணிக்கும் ஆதரவாகத் தன் வீட்டையும் பாதுகாப்பையும் பணயம் வைக்க அஞ்சாத யாசோனின் தியாக உள்ளமும் துணிவும் நாம் பின்பற்றத்தக்கது.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Post a Comment

0 Comments