1923 கல்வெட்டு சொல்லும் உண்மை
1923ஆம் ஆண்டு அணைக்கட்டில் காணப்படும் கல்வெட்டை ஆதாரமாக எடுத்துக்கொள்கிறோம். அதில்,
“SAMBOOR VADAGARA ANICUT WORKS COMPLETED IN 1923”
என்று தெளிவாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு முக்கியமான தகவல் நமக்குக் கிடைக்கிறது:
1923ஆம் ஆண்டிலேயே “SAMBOOR VADAGARA” என்ற பெயர் பயன்பாட்டில் இருந்துள்ளது.
சாம்பவர் வடகரை என்ற பெயர், “சாம்பவர் முனிவர்” பெயரிலிருந்து உருவானது என்ற கருத்து பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், அந்தக் கல்வெட்டில் “சாம்பவர் முனிவர் பெயரால் இந்த ஊர்ப்பெயர் உருவானது” என்ற எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை.
🔎 இது ஒரு முடிவு அல்ல…
உண்மையைத் தேடும் தொடக்கம்!
அடுத்த பகுதிகளில் இன்னும் பல ஆவணங்கள்…
இன்னும் பல கேள்விகள்…
இன்னும் பல வரலாற்றுத் தடயங்கள்…

0 Comments