திருமறையில் யார் இவர் யாரோ? - 66
யோவான் மாற்கு: ஊழியத்திற்குப் பிரயோஜனமுள்ளவன்
1. பெயர்:
யோவான் மாற்கு • John Mark
2. அர்த்தம்:
கர்த்தர் கிருபையுள்ளவர் God is gracious
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 12:12 — தாயார் மரியாளினுடைய வீட்டில் ஜெபக் கூடுகை (விடுதலையான பேதுரு இங்கு வருகிறார்).
அப்போஸ்தலர் 13:5, 13 — முதல் மிஷனரிப் பயணம்; பெர்கேவில் ஊழியத்தைப் பாதியில் விட்டுத் திரும்புகிறார்.
அப்போஸ்தலர் 15:37-39 — மாற்குவினால் பவுல்-பர்னபா இடையே கருத்து வேறுபாடு; பர்னபாவுடன் சீப்புருவுக்குச் செல்கிறார்.
கொலோசெயர் 4:10 / பிலேமோன் 1:24 — பவுலின் சிறைக்கால உடன்வேலையாள் (பர்னபாவின் மைத்துனன்).
2 தீமோத்தேயு 4:11 — பவுலின் இறுதிக்காலத்தில் "ஊழியத்திற்குப் பிரயோஜனமுள்ளவன்" எனப் பாராட்டப்படுகிறார்.
1 பேதுரு 5:13 — அப்போஸ்தலனாகிய பேதுருவின் அன்புக்குரிய ஆவிக்குரிய குமாரன்.
4. வரலாற்றுக் குறிப்புகள்
• புதிய ஏற்பாட்டில் உள்ள நான்கு சுவிசேஷ நூல்களில் இரண்டாவதான 'மாற்கு சுவிசேஷத்தை' எழுதியவர் இவரே.
• ஆரம்பகால திருச்சபை வரலாற்றுப் பதிவுகளின்படி (எ.கா: பாப்பியாஸ்), பேதுரு பிரசங்கித்த நேரில் கண்ட சாட்சிகளையும் செய்திகளையுமே மாற்கு சுவிசேஷமாகத் தொகுத்து எழுதினார்.
• ஆரம்பத்தில் ஊழியத்தில் பயந்து விலகிச் சென்றாலும், பர்னபாவின் அரவணைப்பாலும் தேவ கிருபையாலும் மீண்டும் ஆவிக்குரிய வாழ்வில் பலப்பட்டு, பவுலின் மனதையும்கூட மாற்றும் அளவுக்கு ஒரு சிறந்த ஊழியராக உருவெடுத்தார்.
• எகிப்தில் உள்ள புகழ்பெற்ற அலெக்ஸாண்டிரியா (Alexandria) திருச்சபையை நிறுவி, அதன் முதல் ஆயராக (Bishop) பணியாற்றி, அங்கே தியாக மரணமடைந்தார் என்று திருச்சபை பாரம்பரிய வரலாறு கூறுகிறது.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
யோவான் மாற்கு தன் முதல் ஊழியப் பயணத்தில் பயந்து அல்லது பலவீனப்பட்டு பாதியிலேயே திரும்பிச் சென்றார். ஆனால் தேவன் அவரை முழுமையாகக் கைவிடவில்லை. பர்னபாவின் அன்பான வழிகாட்டுதலாலும் தேவ கிருபையாலும் அவர் மீண்டும் எழுந்து நின்றார். ஆரம்பத்தில் அவரை ஊழியத்திற்குச் சேர்த்துக்கொள்ள மறுத்த பவுலே, பிற்காலத்தில் "என் ஊழியத்திற்குப் பிரயோஜனமுள்ளவன்" என்று சாட்சி கூறும் அளவுக்கு மாறினார்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments