சர்ச் மிஷனரி சொசைட்டி (CMS) அமைப்பின் மூலம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் சுவிசேஷப் பணியாற்றிய குருவானவர் அருள்திரு ஜான் தேவசகாயம் (Rev. John Devasagayam). இவரது மனைவி மனைவி முத்தம்மாள்.
ஆங்கிலிகன் திருச்சபையின் (Anglican Orders) சார்பாக முழுப் பணிவிடைப் பட்டம் (First South Indian Anglican Clergyman) பெற்றுச் சேவை செய்த முதல் தென்னிந்தியர் மற்றும் இரண்டாவது இந்தியர் ஆவார்.
Rev. ஜான் தேவசகாயம் அவர்களின் மனைவியான முத்தம்மாள், அந்த காலகட்டத்திலேயே பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், கல்விக்காகவும் தன் கணவருடன் இணைந்து உறுதுணையாகப் பணியாற்றினார்.
கடாட்சபுரம் கிராமத்தின் நடுவே அமைந்திருக்கும் மாட்சிமை மிகு இத்தேவாலயத்தின் அஸ்திவாரமானது ப்ளாக்மன் ஐயரவர்களால் 1840ல் போடப்பட்டு அவருடைய நண்பர்களாலும் சங்கத்தாராலும் வளர்க்கப்பட்டு 1841 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தேவசகாயம் ஐயரவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
முதல் பெண்கள் ஐக்கிய சங்கம் கடாட்சபுரம் சபையில் வித்திடப்பட்டு 1850 ல் முளைத்து இந்திய திருச்சபையனைத்திலும் வெளிநாடுகளிலும் பரந்து படர்ந்து விட்டது. அரிசிக் காணிக்கை வழக்கத்திற்கு அருளூர் உபதேசியாரின் மனைவி தாய் ஆனது போல தாய்மார் கூட்டத்துக்குத் தேவசகாயம் ஐயரின் மனைவி முத்தம்மாள் தாய் ஆனார்.
கடாட்சபுரத்தில் பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட 'நார்மல் பள்ளி' (Normal School) என்ற மகளிர் பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பை இத்தம்பதியினர் ஏற்றனர்.
இந்த முத்தம்மாள் - ஜான் தேவசகாயம் தம்பதியரின் மகளாகிய அன்னம்மாள் தன் தாயாரான முத்தம்மாளையும், தந்தையாரையும் முன்மாதிரியாகக் கொண்டே பெண்கல்விக்கு பெரும் தொண்டாற்றினார்.இவரது மகள் பற்றி வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.


0 Comments