Ad Code

இந்திய செய்தித்தாள் தினம் | Indian Newspaper Day | January 29

📇இந்திய செய்தித்தாள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
📇இந்தியாவில் முதன்முதலாக வெளிவந்த ஹிக்கிஸ் பெங்கால் கெஜெட் (Hickys Bengal Gazette) என்கிற வார இதழை, ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி (James Augustus Hicky) என்பவர் 1780ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி வெளியிட்டார்.

📇இப்பத்திரிக்கை கொல்கத்தாவிலிருந்து வெளிவந்தது. அரசியல் மற்றும் வர்த்தக ரீதியான இதழாக வெளிவந்தது. அப்போது நடந்த போர் செய்திகளை பத்திரிக்கையில் வெளியிட்டார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

📇இந்த நாளின் நோக்கத்தை மனதில் வைத்து, நாம் செய்ய வேண்டியது ஒரு செய்தித்தாளைப் படிப்பதுதான். நீங்கள் பாரம்பரிய செய்தித்தாள்களைப் படிப்பதை நிறுத்திவிட்டீர்கள் என்றால், இன்று நாம் அவற்றை மீண்டும் படிக்கத் தொடங்க வேண்டிய நாள். இந்தியாவின் செய்தித்தாள் துறையை நாம் ஆதரிப்பது இன்றியமையாதது.

Post a Comment

0 Comments