1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: பெந்.திரு. பின்வரும் 11 -ம் ஞாயிறு (திருத்துவ-10)
தேதி: 09/08/2026
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: 1 சாமு 10:1-10
நிருப வாக்கியம்: ரோம. 12: 1-8
நற்செய்தி பகுதி: மத்தேயு. 17:1-9
சங்கீதம்: 32
2. திருவசனம்
தலைப்பு: மறுரூபமாகுதல்
இருப்பிடம்: 1 சாமு 10:6
திருவசனம்:
(பவர் திருப்புதல்) அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார். நீ அவர்களோடே கூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய்.
(திருவிவிலியம்) பிறகு ஆண்டவரின் ஆவி உன் மேல் வலிமையோடு வரும். நீயும் அவர்களோடு பரவசமடைந்து பேசுவாய். நீயும் வேறு மனிதனாய் மாற்றப்படுவாய்.
3. வசன குறிப்புகள்
நூலாசிரியர் &அவையோர்:
தீர்க்கர் சாமுவேலாக இருக்கலாம்.
இஸ்ரவேல் மக்களுக்கு எழுதியது.
எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
தீர்க்கர் சாமுவேல் காலம்
வசன பின்னணி:
இஸ்ரவேல் தேசத்தின் வரலாற்றில் நியாயாதிபதிகளின் ஆட்சி காலம் நிறைவு பெற்று இஸ்ரவேல் ஜனங்களின் விருப்பப்படி இராஜாக்களின் காலம் ஆரம்பமாகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை எதிரிகளிடமிருந்து ( பெலிஸ்தியர்கள் ) தங்களை பாதுகாப்பதற்காக இராஜா வேண்டுமென்று ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்காமல் சாமுவேல் தீர்க்கதரிசியிடம் முறையிடுகின்றனர். எனவே ஆண்டவர் சாமுவேல் தீர்க்கதரிசியின் மூலம் பெஞ்சமின் கோத்திரத்தைச் சார்ந்த சவுலை சமஸ்த இஸ்ரவேலின் முதல் ராஜாவாக அபிஷேகம் செய்கிறார். ஆண்டவர் சாமுவேல் மூலம் சவுலை அபிஷேகம் செய்து அவனுடைய எதிர்கால வாழ்க்கையை குறித்து பேசுகிறார்.
5. திருவசன விளக்கம்
ஆண்டவர் சவுலை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக தேர்வு செய்திருக்கிறார் என்பதை மூன்று அடையாளங்கள் மூலம் உறுதிப்படுத்துகிறார். அதில் ஒரு அடையாளம் தான் , கிபியாவின் அருகிலிருந்து இசைக்கருவிகளோடு வரும் தீர்க்கதரிசிகளின் கூட்டத்தோடு இணைந்து பவுல் தீர்க்கதரிசனம் சொல்லி வேறு மனுஷனாவான். இங்கு வேறு மனுஷன் என்பது ஆண்டவரால் அதிகாரம் பெற்றவன் என்பதை குறிக்கிறது. கர்த்தருடைய ஆவியானவர் சவுலின் மீது வரும் போது சவுல் ஆண்டவருடைய வேலையை தைரியமாகவும் திறமையுடனும் செய்யும்படியான வேறு மனிதனாகிறார்.
6. இறையியல் & வாழ்வியல்
ஆண்டவர் சவுலை தெரிவு செய்வதற்கு முன்பதாக சவுல் பயந்த சுபாவம் உள்ள ஒரு மனிதனாக இருந்தார். ஆனால் ஆண்டவருடைய ஆவியானவர் அவர் மீது வரும் போது இஸ்ரவேல் ஜனங்களை நடத்தும் படியான புது பலனை பெறுகிறார். ஆண்டவருடைய ஊழியத்தை மாம்சிகமாக நாம் செய்ய முடியாது மாறாக ஆண்டவருடைய ஆவியானவருடைய பலன் நமக்குள் வரும்போது நாம் கர்த்தருடைய வேலையை அவருடைய சித்தத்தின் படி செய்வதற்கு மறுரூபமாகிறோம். இதனால் நம்முடைய இயல்பான திறமையையும் தாண்டி ஆண்டவருடைய பலத்தினால் பெரிய காரியங்களைச் செய்ய முடியும்.
7. அருளுரை குறிப்புகள்
எழுதியவர்
திரு. ரெபின் ஆஸ்டின்

0 Comments