ஐனேயா: முடக்குவாதம் மாறியது
1. பெயர்: ஐனேயா Aeneas
2. அர்த்தம்:
துதிக்கப்பட்டவர் Praiseworthy
3. சிறுகுறிப்பு:
• இவர் லித்தா (Lydda) என்னும் ஊரில் வாழ்ந்தவர்.
• முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளாகப் படுக்கையிலேயே கிடந்தவர்.
• முதலாம் நூற்றாண்டு மருத்துவச் சூழலில் முடக்குவாதம் (Paralysis) என்பது முற்றிலும் குணப்படுத்த முடியாத ஒன்றாக இருந்தது.
• 8 ஆண்டுகள் படுக்கையிலேயே கிடந்த ஐனேயா, சமூகத்தில் முற்றிலும் பொருளாதார ரீதியாகவும் உடலியல் ரீதியாகவும் மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலை.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
அப்போஸ்தலனாகிய பேதுரு இவரைக் கண்டு, "ஐனேயாவே, இயேசு கிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள்" என்று கூறிய உடனே அவர் சொஸ்தமடைந்து எழுந்தார். ஐனேயா பெற்ற இந்த அற்புத சுகத்தைக் கண்ட லித்தாவிலும் சாரோனிலும் வாழ்ந்த மக்கள் அனைவரும் கர்த்தராகிய இயேசுவிடம் திரும்பினார்கள்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
அப்போஸ்தலர் 9:32-35
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments