Ad Code

இன்றைய உலகத்தின் முக்கிய தேவை Important Need of Today's World

இன்றைய உலகத்தின் முக்கிய தேவை..!

 நாம் வாழும் அமெரிக்காவில் ஒரு சுருக்கப்பட்ட அல்லது குறைக்கப்பட்ட நற்செய்தியால் (Reductionistic Gospel) மக்கள் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட தேவனுடைய மகிமையான நற்செய்தியை எடுத்துவிட்டு, அதை வெறும் “நான்கு ஆவிக்குரிய சட்டங்கள்” அல்லது “தேவன் நீங்கள் அறிந்துகொள்ள விரும்பும் ஐந்து காரியங்கள்” என்று சுருக்கிவிட்டோம்.

இந்தப் படிவத்தை நீங்கள் வாசித்து, அதற்கு ஒப்புக்கொண்டு, இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் அந்தச் சிறிய ஜெபத்தைச் சொன்னால்,

👉 “வாழ்த்துக்கள்! நீங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டீர்கள்!”

என்று கூறுகிறார்கள்.

❌ அது இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி அல்ல.

🌎 இந்த உலகம் உண்மையான நற்செய்தியைக் கேட்க வேண்டும்.

---
❓ மிஷன்கள் ஏன் தேவைப்படுகிறது?
❓ சபை நிறுவுதல் ஏன் தேவைப்படுகிறது?
❓ சபை வளர்ச்சி ஏன் தேவைப்படுகிறது?

இவை அனைத்திற்கும் ஏன் இத்தனை முறைகள், கலாச்சாரக் கருத்துகள், உத்திகள், “Relevancy” என்று சொல்லப்படும் அணுகுமுறைகள்—இவ்வளவு குழப்பங்கள் சுவிசேஷ கிறிஸ்தவ உலகத்தில் இருக்கின்றன?

👉 இதற்குக் காரணம் என்ன தெரியுமா?

மக்கள் நற்செய்தி என்றால் என்ன என்பதையே புரிந்துகொள்ளவில்லை.

நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டியவர்களே அதைப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்.

அதனால், நாம் ஒவ்வொரு விதமான வித்தியாசமான முறைகளையும், புதுமையான அணுகுமுறைகளையும் தேடிச் செல்கிறோம்.

ஏதாவது ஒரு விதத்தில் வல்லமையைப் பெறவும், மக்கள் மத்தியில் பொருத்தமானவர்களாகத் தோன்றவும் முயற்சி செய்கிறோம்.

👉ஏனென்றால் நாம் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில்லை.

---
💔 மனிதர்கள் கடினமானவர்கள்.

💔 மனிதர்கள் ஆவிக்குரிய வகையில் கல்லைப் போல உயிரற்றவர்கள்.

💔 மனிதர்கள் தேவனை வெறுக்கிறார்கள்.

உலகம் முழுவதும் இதுவே மனிதனுடைய நிலை.

உலகத்தின் பல பகுதிகளில் மக்கள் நம்மை எதிர்பார்த்துக்கொண்டு,

 “யாராவது வந்து எங்களுக்கு நற்செய்தியைச் சொல்ல வேண்டும்” என்று காத்துக்கொண்டிருக்கவில்லை.

நீங்கள் அவர்களிடம் சென்று நற்செய்தியைச் சொல்லும்போது, அவர்கள் அதை கேட்கக்கூட விரும்பமாட்டார்கள்.

ஆனால்…
🔥 நீங்கள் கிறிஸ்துவுக்காக செல்கிறீர்கள்.

🔥 நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை உண்மையாகப் பிரசங்கிக்கிறீர்கள்.

அப்போது தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து, மரித்தவர்களை உயிர்ப்பிப்பார்.

அவர் தமக்கென்று ஒரு ஜனத்தைச் சம்பாதித்துக்கொள்வார்.

---
⚠️ ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் இருதயத்தைத் திறப்பதற்கான ஏதோ ஒரு கலாச்சாரச் சாவியை கண்டுபிடிப்பதன் மூலம் அவர் இதைச் செய்யமாட்டார்.

மாறாக,
🔥 உண்மையோடும் விசுவாசத்தோடும் நீங்கள் நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலமாகவே அவர் அதைச் செய்வார்.

---
🌎 இன்று இந்த உலகத்திற்கு மிகவும் தேவையானவர்கள் யார்?

👉 நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பிரசங்கிகளே!

இன்றைக்கு உலகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிஷன் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

எல்லா விதமான மிஷன் அமைப்புகள், மிஷனரிகள், ஊழியங்கள் உள்ளன.

ஆனால்…
❗ அதில் எத்தனை பேர் மாற்றத்தை கொண்டு வரக்கூடிய வேதத்தில் உள்ள சத்தியத்தை அதன் கோட்பாடுகளுடன் போதிக்கின்றனர்?

---
🎯 நீங்கள் மிஷன் களத்திற்கு செல்லும்போது…

❌ ஏதோ ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட முறையை மட்டும் உங்களுடன் எடுத்துச் செல்லாதீர்கள்.

❌ ஏதோ ஒரு உத்தியை மட்டும் எடுத்துச் செல்லாதீர்கள்.

❌ இன்றைய மிஷன் பணியில் “அத்தியாவசியமானவை” என்று போதிக்கப்படும் பல்வேறு காரியங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு செல்லாதீர்கள்.

✅ உங்களுடன் ஒரு வேதாகமத்தை எடுத்துச் செல்லுங்கள்.

📖 அந்தப் பொது இடத்திற்குச் செல்லுங்கள்.

📖 வேதாகமத்தைத் திறந்து…

🔥 *
கிறிஸ்துவைப் பிரசங்கியுங்கள்!*

---
❌ நவீனமான, சமகாலத்திற்கேற்ற “நான்கு ஆவிக்குரிய சட்டங்கள்” அல்ல.

❌ “இயேசுவைப் பற்றி தேவன் நீங்கள் அறிந்துகொள்ள விரும்பும் ஐந்து காரியங்கள்” என்ற சுருக்கமான செய்தி அல்ல.

✅ உண்மையான நற்செய்தியைப் பிரசங்கியுங்கள்.

📢 அதைப் பிரசங்கித்து…

👉 மனந்திரும்பும்படி மக்களை அழையுங்கள்.

👉 விசுவாசிக்கும்படி மக்களை அழையுங்கள்.

---
🔥🔥🔥 இதுதான் இந்த உலகத்திற்குத் தேவை.

🌎 உண்மையான நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பிரசங்கிகள்தான் இந்த உலகத்திற்குத் தேவை.

✝️ “குறைக்கப்பட்ட நற்செய்தி அல்ல — கிறிஸ்துவின் முழுமையான நற்செய்தி!

Author: பால் வாஷர் 
Translation: வைத்திலிங்கம்
CEF Tenkasi

Post a Comment

0 Comments