அனனியா: பயங்காட்டியவருக்கே திருமுழுக்கு
1. பெயர்: அனனியா Ananias (of Damascus)
2. அர்த்தம்:
யெகோவா இரக்கமுள்ளவர் • God has been gracious.
3. சிறுகுறிப்பு:
• விவிலியத்தில் இயேசு கிறிஸ்துவால் அனுப்பப்பட்ட "72 சீடர்களில் (Luke 10:1) அனனியாவும் ஒருவர்
• தமஸ்குவில் வாழ்ந்த இறைப்பக்தியும் நற்சான்றுகளும் கொண்ட ஒரு கிறிஸ்தவச் சீடர்.
• நியாயப்பிரமாணத்தின்படி பக்திமுள்ளவனும், அங்கே குடியிருந்த அனைத்து யூதர்களாலும் நற்சாட்சி பெற்றவர்.
• பிற்காலத்தில் இவர் தமஸ்கு நகரின் முதல் ஆயராக (Bishop) நியமிக்கப்பட்டார்.
• நற்செய்தி பணிக்காக கடுமையாக அடிக்கப்பட்டார். இரும்புக் கொக்கிகளால் உடல் கிழிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். இறுதியில், நகருக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு கற்களால் எறியப்பட்டு தியாகியாக (Martyr) இறந்தார்.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
திருச்சபையைத் தீவிரமாகத் துன்புறுத்தி, விசுவாசிகளுக்குப் பேரச்சமாய் விளங்கிய தர்சு ஊரானாகிய சவுல், தமஸ்கு வழியில் ஆண்டவரைக் கண்டு பார்வையிழந்த நிலையில் இருந்தார். அப்பொழுது ஆண்டவர் அனனியாவுக்குத் தரிசனத்தில் தோன்றி, 'நேரான தெரு'விலுள்ள யூதாவின் வீட்டில் இருக்கும் சவுலிடம் செல்லப் பணித்தார். ஆரம்பத்தில் அச்சமும் தயக்கமும் கொண்டிருந்தாலும், தேவ கட்டளைக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து சென்றார். சவுலின் மீது கரங்களை வைத்து, அவரை "சகோதரனாகிய சவுலே" என்று அன்போடு அழைத்து, அவர் பார்வை பெறவும், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டுத் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெறவும் காரணமாயிருந்தார்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
அப்போஸ்தலர் 9:10-19
அப்போஸ்தலர் 22:12-16
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments