Ad Code

ஒப்புரவாக்கும் திருவிருந்து 1 கொரிந்தியர் 11:28 • Holy Eucharist for Reconciliation

திருவசன தியானம் 2026

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு:  திரித்துவ திருநாள் பின்வரும் ___ ஆம் ஞாயிறு
தேதி: 
வண்ணம்: 
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: 
நிருப வாக்கியம்:
நற்செய்தி பகுதி: 
சங்கீதம்: 

2. திருவசனம்
2.1 தலைப்பு: 
ஒப்புரவாக்கும் திருவிருந்து
2.2 இருப்பிடம்: 
1 கொரிந்தியர் 11:28
2.3 திருவசனம்:
(பவர் திருப்புதல்)  .“எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.”

(திருவிவிலியம்) 

3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு

4. வசன குறிப்புகள்
4.1 நூலாசிரியர்: தூய பவுலடிகளார்
4.2 அவையோர்:
கொரிந்து இறைமக்கள்.
4.3 வசன பின்னணி:
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபையில் திருவிருந்து பற்றிய தவறான அணுகுமுறையைச் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் திருவிருந்தை அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் கொண்டாடினர். எனவே, பவுல் “தன்னைத்தானே சோதித்தறிந்து” என்று கூறுகிறார். நான் தேவனோடு சரியான உறவில் இருக்கிறேனா? என் சகோதரர், சகோதரியோடு ஒப்புரவில் இருக்கிறேனா? என் பாவங்களை உணர்ந்து மனந்திரும்புகிறேனா? கிறிஸ்துவின் சிலுவைப் பலியை உணர்ந்து திருவிருந்தில் பங்குகொள்கிறேனா? திருவிருந்து என்பது வெறுமனே அப்பத்தையும் திராட்சரசத்தையும் உட்கொள்வது அல்ல. கிறிஸ்துவோடும், அவருடைய திருச்சபையோடும், ஒருவரோடொருவர் ஒப்புரவாகும் பரிசுத்த ஐக்கியத்தின் அடையாளமாகும்.

5. திருவசன விளக்கவுரை
A. “தன்னைத்தானே சோதித்தறிந்து”
இது சுய பரிசோதனையைக் குறிக்கிறது. திருவிருந்துக்கு முன்பாக நம்முடைய இருதயத்தைப் பரிசோதிக்க வேண்டும்.
“கர்த்தாவே, என்னுடைய இருதயத்தை ஆராயும்” என்ற மனநிலை வேண்டும்.

B. “இந்த அப்பத்தில் புசித்து”
அப்பம் கிறிஸ்துவின் சரீரத்தை நினைவுபடுத்துகிறது. இது நமக்காக உடைக்கப்பட்ட கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூரச் செய்கிறது.

C. “இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்”. 
பாத்திரம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கையை நினைவுபடுத்துகிறது.

D. “ஒப்புரவு”
ஒப்புரவு என்பது பிரிவை அகற்றி உறவை மீண்டும் ஏற்படுத்துதல். 
கிறிஸ்துவின் சிலுவை முதலில் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஒப்புரவை ஏற்படுத்துகிறது. அதே ஒப்புரவு நம்முடைய சகோதர சகோதரிகளிடையேயும் வெளிப்பட வேண்டும்.

6. இறையியல் & வாழ்வியல்
திருவிருந்து என்பது கிறிஸ்து நமக்காக தம்மையே அர்ப்பணித்ததை நினைவுகூரும் பரிசுத்த நிகழ்வு. சிலுவையில் கிறிஸ்து நமக்காக தமது சரீரத்தையும் இரத்தத்தையும் கொடுத்தார். திருவிருந்து தேவனோடு ஒப்புரவை வெளிப்படுத்துகிறது. மனிதனின் பாவம் தேவனிடமிருந்து அவனைப் பிரிக்கிறது. ஆனால் கிறிஸ்துவின் சிலுவையின் மூலம் அந்தப் பிரிவு நீக்கப்பட்டு, தேவனோடு ஒப்புரவு ஏற்படுகிறது.

திருவிருந்து ஒருவரையொருவர் ஒப்புரவாக்குகிறது. திருவிருந்து நம்மை “நான்” என்பதிலிருந்து “நாம்” என்ற வாழ்க்கைக்கு அழைக்கிறது. திருவிருந்து தனிப்பட்ட ஆன்மீக அனுபவம் மட்டுமல்ல; அது சபையின் ஐக்கியத்தையும் வெளிப்படுத்துகிறது. ஒரே அப்பத்தில் பங்குகொள்ளும் நாம் ஒரே கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறோம். எனவே, மனதில் பகை, வெறுப்பு, பொறாமை வைத்துக்கொண்டு திருவிருந்தில் பங்குகொள்வது அதன் உண்மையான அர்த்தத்திற்கு முரணானது. திருவிருந்து நம்மை பரிசுத்தமான வாழ்க்கைக்கு அழைக்கிறது “தன்னைத்தானே சோதித்தறிந்து” என்பது பயமுறுத்துவதற்காக அல்ல; மனந்திரும்பி, கிருபையைப் பெற்று, புதுப்பிக்கப்பட்ட வாழ்க்கையுடன் கிறிஸ்துவிடம் வருவதற்காக.

7. அருளுரை குறிப்புகள்
1.திருவிருந்துக்கு முன் நம்மை சோதிப்போம்
2. உடைந்த உறவுகளைச் சரிசெய்வோம்
3.கிறிஸ்துவின் சிலுவை அன்பை நினைவுகூர்வோம்
4.சபையின் ஐக்கியத்தைப் பாதுகாப்போம்
5. ஒப்புரவின் தூதர்களாக வாழ்வோம்.

எழுதியவர்
சகோ. கோயில்பிள்ளை
இறையியல் மாணவர்

Post a Comment

0 Comments