Ad Code

ஒடுக்கப்பட்டவரோடு ஒன்றிணையும் ஆண்டவர் God of Oppressed

திருவசன தியானம் 2026

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு: திரித்துவ திருநாள் பின்வரும் 12 ஆம் ஞாயிறு
தேதி: 23.08.2026
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: உபாகமம் 26:5 -11 
நிருப வாக்கியம்: பிலேமோன் 10 - 18
நற்செய்தி பகுதி: யோவான் 4: 5- 14
சங்கீதம்: 146

2. திருவசனம்

2.1 தலைப்பு: ஒடுக்கப்பட்டவரோடு ஒன்றிணையும் ஆண்டவர்
2.2 இருப்பிடம்: சங்கீதம்: 146:7
2.3 திருவசனம்:
(பவர் திருப்புதல்)   “அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்.” சங்கீதம்: 146:7
(திருவிவிலியம்).ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்;
பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்;
சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். திருப்பாடல் : 146:7

3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
CSI தலித் மற்றும் ஆதிவாசி ஞாயிறு

4. வசன குறிப்புகள்

4.1 நூலாசிரியர்:
இந்த சங்கீதத்திற்கு, எபிரெய வேதாகமத்தில் குறிப்பிட்ட தலைப்பு எதுவும் இல்லை. எனினும், செப்டுவஜின்ட் (Septuagint) கிரேக்க மொழிபெயர்ப்பு மற்றும் யூத பாரம்பரியத்தின்படி, இது தீர்க்கதரிசிகளாகிய ஆகாய் மற்றும் சகரியா ஆகியோரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. சில அறிஞர்கள் இதை தாவீது ராஜா எழுதியிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

4.2 அவையோர்:
சிறையிருப்பிலிருந்து மீண்டு எருசலேமில் மீண்டும் குடியேறி, தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும் பாதுகாப்புத்திற்காகவும் போராடிக் கொண்டிருந்த இஸ்ரவேல் (யூத) சமூகம் மற்றும் ஒடுக்கப்பட்ட எளிய ஜனங்கள்.

4.3 வசன பின்னணி:
தேவன் பலவீனமானவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் கைவிடாதவர் என்பதை வெளிப்படுத்தும் மையமாக அமைந்துள்ளது. இங்கு குறிப்பிடப்படும் ஒடுக்கப்பட்டவர்கள் என்பது அநியாயத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உரிமை மறுக்கப்பட்டவர்கள், அதிகாரமுள்ளவர்களால் துன்புறுத்தப்படுகிறவர்கள் போன்றவர்களைக் குறிக்கிறது. "கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்" (The Lord sets prisoners free) என்ற பிரகடனம் சிறையிருப்பில் இருக்கும் நபர்களுக்கான மாபெரும் நம்பிக்கையையும் விடுதலையையும் உறுதிப்படுத்துகிறது.

5. திருவசன விளக்கவுரை
இந்த ஒரே வசனத்தில் கர்த்தர் எளிய மக்களுக்குச் செய்யும் மூன்று மகத்தான செயல்கள் விவரிக்கப்பட்டுள்ளன: 
அ) "அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்" உலகத்தில் உள்ள செல்வந்தர்களும், பிரபுக்களும், ஏழைகளையும் பலவீனர்களையும் தங்களுக்குச் சாதகமாக ஒடுக்கும்போது, கர்த்தர் அவர்களின் சத்தத்தைக் கேட்டு நீதியான தீர்ப்பை வழங்குகிறார். 

ஆ) "பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்" இது கர்த்தரின் பராமரிப்பைக் குறிக்கிறது. வனாந்தரத்தில் இஸ்ரவேல் மக்களுக்கு மன்னா மற்றும் காடைகளைத் தந்து போஷித்தவர் எளியவரையும் போஷிப்பார். 

இ) "கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்" அடிமைத்தனத்தில் தவிக்கும் மனிதர்களை விடுவிக்கும் வல்லமை கர்த்தருக்கு மட்டுமே உண்டு.

6. இறையியல் & வாழ்வியல் 
தேவன், தொலைவில் இருந்து மனிதனின் துன்பத்தைப் பார்க்கும் தேவன் அல்ல; துன்பப்படுகிற மனிதனின் வாழ்க்கைக்குள் இறங்கி, நீதிசெய்து, போஷித்து, விடுதலை செய்கிற தேவன். 

ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி செய்கிற தேவனை நாம் ஆராதிக்கிறோம் என்றால், ஒடுக்கப்பட்டவர்களுக்காக நாம் நிற்க வேண்டும்; பசியுள்ளவர்களுக்கு ஆகாரம் தருகிற தேவனை நம்புகிறோம் என்றால், பசியுள்ளவர்களுடன் நாம் பகிர வேண்டும்; கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிற தேவனைப் பின்பற்றுகிறோம் என்றால், பிறருடைய விடுதலைக்காக நாம் உழைக்க வேண்டும்.

7. அருளுரை குறிப்புகள்
1. ஒடுக்கப்பட்டவர்களுக்கு  நியாயஞ்செய்கிறார்
2. பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
3. கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்

எழுதியவர்
சகோ. இம்மானுவேல்
சபை ஊழியர்.

Post a Comment

0 Comments