ஒடுக்கப்பட்டவர்களோடு கடவுள் எப்படி ஒன்றிணைகிறார்?
1. கண்ணோக்கும் கடவுள்
The God Who Sees (God of Observation)
2. களத்தில் நிற்கும் கடவுள்
The God Who Stands in the Field (God of Presence)
3. கட்டவிழ்க்கும் கடவுள்
The God Who Unties the Chains (God of Liberation)
விடுதலைப் பயண நூலில் (யாத்திராகமம் 3:7-8) எகிப்தில் ஒடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்களின் வரலாற்றின் வழியாகக் கடவுள் ஒடுக்கப்பட்டவர்களோடு எவ்வாறு ஒன்றிணைகிறார் என்பதைக் காண்போம்.
1. கண்ணோக்கும் கடவுள்: எகிப்திய அடிமைத்தனத்தில் இஸ்ரயேல் மக்கள் பட்ட துன்பங்களையும் கண்ணீரையும் கடவுள் பாராமுகமாக இராமல் ஆழமாக உற்றுநோக்குகிறார். ஒடுக்கப்பட்டோரின் கதறலைக் கேட்டு அவர்களின் வலியை உணர்வதன் மூலம் அவர் முதன்முதலில் அவர்களோடு ஒன்றிணைகிறார்.
2. களத்தில் நிற்கும் கடவுள்: உயரத்தில் தூரமாக இராமல், எகிப்தின் அடிமைத்தனக் களத்திற்கே இறங்கி வருகிறார். மக்களின் போராட்டத்திலும் துயரத்திலும் அவர்களோடு உடனாக நின்று, 'நான் உங்களோடு இருக்கிறேன்' என்ற உடனிருப்பைக் காட்டுகிறார்.
3. கட்டவிழ்க்கும் கடவுள்: பார்வோனின் அடக்குமுறை, சாட்டையடி மற்றும் சாதிய/சமூக விலங்குகளை உடைத்தெறிகிறார். அவர்களை அடிமைத்தனத்திலிருந்து வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலத்திற்கு அழைத்துச் சென்று முழுமையான விடுதலையையும் கண்ணியத்தையும் அளிக்கிறார்.
Prepared by
Meyego
9486810915

0 Comments