திருமறையில் யார் இவர் யாரோ? - 85 லூக்கா: நம் திறமைகள் கடவுளுக்காக...
1. பெயர்:
லூக்கா • Luke
2. அர்த்தம்:
ஒளி தருபவர் Giver of Light
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் நடபடிகள் (16:10-17, 20:5-15, 27:1–28:16) – அப்போஸ்தலர் நடபடிகள் நூலில் வரும் "நாங்கள்" (We-passages) என்னும் பகுதிகள், இவர் பவுலோடு நேரில் பயணம் செய்தவர் என்பதைக் காட்டுகின்றன.
கொலோசெயர் 4:14 – "பிரியமுள்ள வைத்தியனாகிய லூக்காவும்..." (லூக்கா ஒரு மருத்துவர் என்பதைப் பவுல் உறுதிப்படுத்துகிறார்).
2 தீமோத்தேயு 4:11 – "லூக்கா மாத்திரம் என்னோடு இருக்கிறான்." (பவுலின் இறுதிக்காலச் சிறைவாசத்திலும் அவருடன் உண்மையாய் இருந்த தோழர்).
பிலேமோன் 1:24 – "என் உடன்வேலையாளராகிய... லூக்கா என்பவர்களும் வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்." (பவுலின் நற்செய்திப் பணித் தோழர்).
4. வரலாற்றுக் குறிப்புகள்
• பெரும் நூல்களின் ஆசிரியர்: புதிய ஏற்பாட்டில் உள்ள லூக்கா எழுதிய நற்செய்தி நூல் மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் ஆகிய இரண்டு வரலாற்றுப் புத்தகங்களை எழுதியவர்.
• புறஜாதி எழுத்தாளர்: புதிய ஏற்பாட்டு நூல்களை எழுதியவர்களில் இவர் மட்டுமே யூதர் அல்லாத புறஜாதியார் (Gentile) எனக் கருதப்படுகிறார். இவர் சீரியாவிலுள்ள அந்தியோகியாவைச் சேர்ந்தவர்.
• துல்லியமான ஆராய்ச்சியாளர்: இயேசுவின் வாழ்க்கையை நேரில் கண்ட சாட்சிகளிடமிருந்து தகவல்களைச் சேகரித்து, ஆராய்ந்து, வரிசைக்கிரமமாக எழுதிய வரலாற்று ஆய்வாளர் (லூக்கா 1:1-4).
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
லூக்கா தனது கல்வி, ஆராய்ச்சித் திறன் மற்றும் மருத்துவத் தொழிலை கடவுளின் ராஜ்யத்திற்காகப் பயன்படுத்தினார். மேலும், எல்லாரும் விட்டுப்பிரிந்த கடினமான சூழ்நிலையிலும் பவுலுக்கு கடைசி வரை உண்மையுள்ள தோழனாக இருந்தார். நமது தொழில் மற்றும் திறமைகளை இறைப்பணிக்கு அளித்து, ஆபத்தான காலத்திலும் உண்மையுள்ள சீடர்களாக வாழ லூக்காவின் வாழ்க்கை நமக்குக் கற்பிக்கிறது.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments