Ad Code

தீமோத்தேயு • Timothy Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 84
தீமோத்தேயு: இறுதிவரை இறைப்பணியில்

1. பெயர்: தீமோத்தேயு • Timothy

2. அர்த்தம்: 
கடவுளால் கனப்படுத்தப்பட்டவன்

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 16:1–3 – பவுல் லிஸ்திராவில் தீமோத்தேயுவைச் சந்தித்து ஊழியத்தில் இணைத்துக் கொள்ளுதல்.
பிலிப்பியர் 2:19–22 – பவுலால் நற்சான்றிதழ் பெற்ற உண்மையுள்ள ஊழியர்.
1 தீமோத்தேயு & 2 தீமோத்தேயு – பவுல் தனது விசுவாசப் புத்திரனான தீமோத்தேயுவுக்கு எழுதிய ஆலோசனைக் நிருபங்கள்.
1 கொரிந்தியர் 4:17, 16:10 – கொரிந்து சபைக்கு பவுலால் அனுப்பப்பட்ட கடவுளின் ஊழியர்.

4. வரலாற்றுக் குறிப்புகள்
• குடும்பம் தாய் ஐனிக்கேயாள் மற்றும் பாட்டி லோவிசாள் ஆகியோரின் வழிகாட்டுதலால் சிறுவயதிலிருந்தே வேதவசனங்களைக் கற்றுக்கொண்டவர். தாய் யூத விசுவாசி, தந்தை கிரேக்கர் (2 தீமோத்தேயு 1:5, 3:15).
• சுபாவம்: இயல்பாகவே கூச்ச சுபாவமும், அடிக்கடி வயிற்று உபாதையும் கொண்டவராக இருந்தாலும் (1 தீமோ. 5:23), பவுலின் இறுதிவரை உண்மையுள்ள சீடராகத் திகழ்ந்தார்.
• மிஷனரி பயணம்: பவுலின் 2-வது மற்றும் 3-வது மிஷனரிப் பயணங்களில் உடன்வேலையாளாகப் பயணித்து, மாசிதோனியா, கொரிந்து, பிலிப்பி போன்ற இடங்களில் ஊழியம் செய்தார்.
• எபேசு சபையின் பொறுப்பு: பவுலால் எபேசு சபையைக் கண்காணிக்கும் தலைவராக (Bishop/Overseer) நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார்.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
தீமோத்தேயு இயல்பாகவே கூச்ச சுபாவமும், உடல்நலக் குறைபாடும் கொண்டவராக இருந்தார். ஆயினும், கடவுள் தந்த தைரியத்தையும் ஆவியின் பலத்தையும் கொண்டு அவர் பெரிய சபையைக் கண்காணிக்கும் தலைவராக உயர்ந்தார். நம்மிடம் உள்ள பயத்தையும் இயலாமையையும் கடவுளின் பலத்தால் வெல்ல முடியும். கடவுளின் ஊழியத்திற்கும் சாட்சிக்கும் வயது தடையல்ல; நம்முடைய பரிசுத்தமான வாழ்க்கையும் உண்மையுமே நம்மை உயர்வாகக் காண்பிக்கும்.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Post a Comment

0 Comments