தியொனீசியு: தாழ்மையோடு நம்புவோம்
1. பெயர்:
தியொனீசியு • Dionysius the Areopagite
2. அர்த்தம்:
தியோனிசஸுக்கு உரியவன் (கிரேக்கக் கடவுளின் பெயர் தழுவியது).
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 17.34
தியொனீசியு சத்தியத்தை உணர்ந்து பவுலோடு சேர்ந்து இயேசுவை விசுவாசித்தார் (அவருடன் 'தாமரி' என்னும் ஸ்திரீயும் சிலரும் விசுவாசிகளானார்கள்).
4. வரலாற்றுக் குறிப்புகள்
•அரியோபாகியன் (Areopagite): ஏதேன்ஸ் (Athens) நகரத்தின் உயர்மட்ட சட்ட மற்றும் தத்துவ மன்றமாகிய "அரியோபாகஸ்" (Areopagus/Mars Hill) சங்கத்தின் உறுப்பினர் அல்லது நியாயாதிபதி.
• திருச்சபை வரலாற்றாசிரியர் யூசேபியஸின் (Eusebius) குறிப்புகளின்படி, இவர் பின்னாள்களில் அதேன்ஸ் சபையின் முதல் ஆயராக (Bishop) நியமிக்கப்பட்டு பணியாற்றினார் என்று நம்பப்படுகிறது.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
லௌகீகக் கல்வி, உயர் பதவி, சமூக அந்தஸ்து ஆகியவை கடவுளை அறிந்துகொள்வதற்குத் தடையாக இருக்கக்கூடாது. சுற்றியிருந்த தத்துவஞானிகள் பவுலின் செய்தியைப் ஏளனம் செய்தபோதும், தியொனீசியு தனது பகுத்தறிவையும் தகுதியையும் தாழ்த்தி சத்தியத்தைப் பின்பற்றி விசுவாசியானார்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

1 Comments
சகோதரரே வணக்கம். உங்களுடைய பதிவுகளை காப்பி செய்யும் வசதியை கொடுத்தால் நலமாக இருக்கும். அனைவரும் அறிந்துக்கொள்ள தானே பதிவிடுகிறீர்கள். நாங்கள் காப்பி செய்து அனேகருக்கு பகிர உதவியாக இருக்கும். நன்றிகள்
ReplyDelete