செக்குந்து: உண்மையான உடன்பணியாளர்
1. பெயர்:
செக்குந்து • Secundus
2. அர்த்தம்:
"இரண்டாவது" (Second) அல்லது "சாதகமானவர் / அதிர்ஷ்டசாலி" (இலத்தீன் மொழிச் சொல்).
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 20:4 – "ஆசியாநாடுவரைக்கும் அவனுடனேகூடப்போனவர்கள்: பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கரில் அரிஸ்தர்க்குவும், செக்குந்துவும், தெர்பெய ஊரானாகிய காயுவும், தீமோத்தேயுவும், ஆசியாநாட்டாராகிய தீகிக்கும், துரோப்பீமுமே."
4. வரலாற்றுக் குறிப்புகள்
• இவர் மக்கதோனியா மாகாணத்தில் உள்ள தெசலோனிக்கா நகரத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ விசுவாசி.
• அப்போஸ்தலனாகிய பவுலின் மூன்றாவது மிஷனரிப் பயணத்தின் போது, அவருடன் இணைந்து பயணம் செய்த தோழர்களில் ஒருவர்.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
எருசலேமில் உள்ள வறுமையிலிருந்த பரிசுத்தவான்களுக்குப் புறஜாதி சபைகளிடமிருந்து சேர்க்கப்பட்ட அன்புக்கரத்தின் காணிக்கையைக் கொண்டு செல்லும் பொறுப்பான பணியில் பவுலுக்குத் துணையாகச் சென்றார். வேதாகமத்தில் இவரைப் பற்றிய குறிப்பு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே காணப்பட்டாலும், ஆபத்துக்கள் நிறைந்த அக்காலப் பயணங்களில் பவுலுக்கு உண்மையுள்ள உடன்வேலையாளாகவும் பாதுகாப்பாகவும் இருந்தார்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil
From NCCI Campus

0 Comments