Ad Code

நாசரேத் மர்க்காஷிஷ் மேல் நிலைப்பளியின் சாதனை Nazareth School Achievement

1970- 71 கல்வி ஆண்டில் , தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மர்க்காஷிஷ் மேல் நிலைப்பளியின் மிகப்பெரிய சாதனை. 

55 ஆண்டுகளுக்கு முன்பே நம் நாசரேத் ஊர் மற்றும் அதில் அமைந்துள்ள மர்க்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் பெருமையை உலகம் அறிய செய்யும் வண்ணம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய பெருமை, ஆசிரியர்களான திருவாளர்கள் வேதராஜ், விக்டர் பால்ராஜ் , வில்லியம்ஸ், மற்றும் ஜெயராஜ் (ஓவிய ஆசிரியர்) ஆகியோரை சாரும். 

1969 ஜூலை மாதம் அமெரிக்கா முதல் முதலில் நிலவுக்கு அப்பல்லோ 11 என்ற விண்கலத்தில் மூன்று பேர் அடங்கிய குழுவை அனுப்பியது. அந்த விண்கலத்தில் உள்ள லூனார் மாடியூல் என்ற பகுதி மட்டும் தனியாக பிரிந்து நிலவில் இறங்கியது. 

இந்திய நேரப்படி 1969 ஜூலை 21 காலை 8:26 மணிக்கு நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவர் நிலவில் முதன் முதலாக காலடி வைத்தார். அவரைத் தொடர்ந்து ஆல்ட்ரின் என்பவர் இறங்கினார்.

இதே நிகழ்வை 1970- 71 கல்வி ஆண்டில் நாசரேத் மர்க்காஷிஸ் மேல் நிலைப் பளியின் ஆண்டு விழாவின் போது அப்படியே தத்ரூப மாக செய்து காட்டினார்கள். 

மேலே குறிப்பிடப்பட்ட நான்கு ஆசிரியர்களும் இணைந்து லூனார் மாடியூலை உருவாக்கி , பள்ளி நாடக மேடையில் இறக்கி விட்டனர். 

அந்த லூனார் மாடியூலில் இருந்து விண்வெளி வீரர்கள் போல் அச்சு அசல் உடை அணிந்து முதலாவது ஒரு மாணவனும் அடுத்து ஒரு மாணவனும் நிலவில் இறங்குவது போலவே இறங்கினர். 

முதலாவது நீல் 
ஆர்ம் ஸ்ட்ராங் போல் நடித்து இறங்கியவர்   
திரு. T. பிரான்சிஸ், (ஓய்வு பெற்ற பொருளியல் ஆசிரியர்) இரண்டாவது ஆல்ட்ரின் போன்று நடித்து இறங்கியவர் வால்ப் பாறையை சேர்ந்த. திரு. புஷ்பராஜ் என்ற விடுதி மாணவர். இவர்கள் இருவரும் அப்பொழுது 4 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர். 

எம்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பேசப்பட்டது. அமெரிக்கன் ரிப்போர்ட்டர் என்ற அமெரிக்க பத்திரிக் கையும் எம் பள்ளி ஆண்டு விழாவில் எடுத்த புகைப் படங்களை வெளியிட்டது.

Post a Comment

0 Comments