திருமறையில் யார் இவர் யாரோ? - 95
ஸ்கேவா: பின்னணி அதிகாரம் தராது
1. பெயர்:
ஸ்கேவா Sceva
2. அர்த்தம்:
ஆயத்தமானவர் (Prepared / Set in order), இடக்கையன் (Left-handed) அல்லது கருவி/பாத்திரம் (Vessel).
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 19:13-16 — ஸ்கேவா மற்றும் அவரது ஏழு மகன்களைப் பற்றியக் குறிப்பு. ஸ்கேவாவின் மகன்கள் "பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் நாமத்தினாலே" பொல்லாத ஆவியைத் துரத்த முயன்றபோது, "இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார்?" என்று கூறி பிசாசு பிடித்த மனிதன் அவர்களைத் தாக்கி காயங்களுடன் ஓடச்செய்தான்; இந்நிகழ்வால் எபேசுவில் கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டு, பயபக்தியடைந்த பலர் தங்கள் மாயவித்தை புத்தகங்களைச் சுட்டெரித்தனர்.
4. வரலாற்றுக் குறிப்புகள்
• ஸ்கேவா என்பவர் ஆசியா மைனரில் உள்ள எபேசு நகரில் வாழ்ந்த ஒரு யூதப் பிரதான ஆசாரியன்.
• இவருக்கு ஏழு மகன்கள் இருந்தனர். இவர்கள் ஊர் ஊராகச் சென்று பிசாசுகளைத் துரத்தும் தொழிலைச் செய்து வந்த யூத மந்திரவாதிகளாக (Exorcists) இருந்தனர்.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
ஆசாரியன் மகன் என்ற மதரீதியான பட்டமோ, பரம்பரை அடையாளமோ பிசாசின் மீது அதிகாரத்தைத் தராது. இயேசுவின் நாமத்தைப் பயன்படுத்த உண்மையான மறுபிறப்பும், கீழ்ப்படிதலும், விசுவாசமும் அவசியம். இயேசுவின் நாமம் ஒரு மந்திரச் சொல் அல்ல, அது அதிகாரமுள்ள பரிசுத்த நாமம்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments