திருவசன தியானம் 2026
1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: திரித்துவ திருநாள் பின்வரும் 14 ஆம் ஞாயிறு
தேதி: 06-09-2026
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: ஏசாயா 50:4-7
நிருப வாக்கியம்: தீத்து 2:1-10
நற்செய்தி பகுதி: லூக்கா 5:1-10
சங்கீதம்: 119:1-16
2. திருவசனம்
2.1 தலைப்பு: வாழ்வை மாற்றும் ஆசிரியர்கள்
2.2 இருப்பிடம்: சங்கீதம் 32:8
2.3 திருவசனம்:
(பவர் திருப்புதல்)
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
(திருவிவிலியம்) திருப்பாடல்கள் 32 : 8
நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி உனக்கு அறிவுரை கூறுவேன்.
3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக ஆசரிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வரும் ஆசிரியர் ஞாயிறாக ஆசரிக்கப்படும்.
அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்
4. வசன குறிப்புகள்
4.1 நூலாசிரியர்: தாவீது
4.2 அவையோர்: இஸ்ரயேல் மக்கள்
4.3 வசன பின்னணி:
கர்த்தரிடத்தில் தாவீது மன்னிப்பைப் பெற்ற பின் புது துவக்கத்துடன் தனது வாழ்வை தொடங்கும் அனுபவத்தில் எழுதப்பட்டது. பாவத்திலிருந்து மீட்கப்பட்ட விசுவாசி இனி தவறி நடக்காத படி கர்த்தர் போதனை செய்வார் எனும் வாக்குத்தத்தை இந்த வசனம் பிரதிபலிக்கிறது.
5. திருவசன விளக்கவுரை
போதனை என்ற வார்த்தைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள எபிரேய வார்த்தை சக்கல் (Sakal) ஆகும். இதன் பொருள் விவேகத்தை அளித்தல் என்பதாகும். கர்த்தர் நமது வாழ்வின் வழிகாட்டியாக விவேகத்தை தருபவர் (V.8a). வழியைக் காட்டுவேன் என்ற வார்த்தைக்கு யாரா (Yarah) எனும் எபிரேய பதம் கொடுக்கப்பட்டுள்ளது. அது குறிபார்த்து எறிதல் எனும் பொருளுடையது. வாழ்வின் இருளகற்றி சரியான இலக்கில் நம்மை கொண்டு சேர்க்கும் ஒளியேற்றுபவராக கர்த்தர் இருக்கிறார் (V.8b). ஆலோசனை என்பது நமது வாழ்க்கையைக் குறித்த திட்டத்தையும் நோக்கத்தையும் கர்த்தர் நம்முடன் பயணித்து நிறைவேற்றுவார் என்பதனை உறுதி செய்கிறது (V.8c).
6. இறையியல் & வாழ்வியல்
இயேசு கிறிஸ்து நமது வாழ்வில் சரியான பாதைக் காட்டும் ஆசிரியராக இருக்கிறார். வாழ்வின் தீமையை அகற்றி நன்மை எனும் ஒளியினை ஏற்றும் ஆசிரியராக, குறிப்பிட்ட காலம் அல்ல நமது வாழ்நாள் முழுதும் நம்முடன் பயணிக்கும் ஆசிரியராக இருக்கிறார். நாம் நமது தீய செயல்களை அகற்றி (சங்கீதம் 32:1-5), கர்த்தரை உறுதியாய் பற்றிக்கொள்ள அழைக்கப்படுகிறோம் (சங்கீதம் 32:6,7).
7. அருளுரை குறிப்புகள்
அ) வாழ்வின் வழிகாட்டும் நல்லாசிரியர் இயேசு - ஏசாயா 50:4-7
ஆ) வாழ்வில் ஒளியேற்றும் நல்லாசிரியர் இயேசு - லூக்கா 5:1-10
இ) வாழ்க்கை முழுதும் நம்முடன் பயணிக்கும் நல்லாசிரியர் இயேசு - சங்கீதம் 119:1-16
எழுதியவர்
கிறிஸ்து ராசையா
சபை ஊழியர்.

0 Comments