தீகிக்கு: நம்பிக்கையான ஊழியர்
1. பெயர்:
தீகிக்கு Tychicus
2. அர்த்தம்:
அதிர்ஷ்டசாலி
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 20:4 – ஆசியாவிலிருந்து பவுலோடு பயணம் செய்த ஊழியத் தோழர்களில் ஒருவர்.
எபேசியர் 6:21-22 – பவுலால் "பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையான ஊழியக்காரனுமாகிய தீகிக்கு" என்று குறிப்பிடப்பட்டு, எபேசு சபைக்கு நிருபத்தை எடுத்துச்செல்ல அனுப்பப்பட்டவர்.
கொலோசெயர் 4:7-8 – கொலோசே சபைக்கு நிருபத்தையும் தகவல்களையும் கொண்டு சென்ற உண்மையுள்ள உடன்வேலையாள்.
2 தீமோத்தேயு 4:12 – பவுலால் எபேசுவுக்கு அனுப்பப்பட்டவர் ("தீகிக்குவை எபேசுவுக்கு அனுப்பினேன்").
தீத்து 3:12 – தீத்துவிற்கு உதவியாக பவுலால் அனுப்ப திட்டமிடப்பட்ட ஊழியர்.
4. வரலாற்றுக் குறிப்புகள்
• ஆசியாவைச் சேர்ந்தவர்: இவர் ரோம மாகாணமான ஆசியாவைச் (Asia Minor) சேர்ந்த கிறிஸ்தவர்.
• பவுலின் நம்பகமான தூதர்: அப்போஸ்தலனாகிய பவுல் சிறையில் இருந்தபோது, அவரது நிருபங்களை (எபேசியர், கொலோசெயர்) சபைகளிடம் பத்திரமாகச் சேர்த்த தூதராகச் செயல்பட்டார்.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
தீமோத்தேயு மற்றும் தீத்து ஆகியோர் பவுலைச் சந்திக்க வரும்போது, அவர்களுடைய சபைப் பொறுப்புகளைத் தற்காலிகமாக கவனித்துக் கொள்ளக்கூடிய தகுதியுள்ள தலைவராகத் தீகிக்கு இருந்தார்.நாமும் நமக்குக் கொடுக்கப்பட்ட சிறிய காரியங்களிலும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments