Ad Code

காயு Gaius of Macedonia மக்கதோனியனாகிய காயு

திருமறையில் யார் இவர் யாரோ? - 97
காயு: ஆபத்திலும் உண்மையுள்ள தோழமை

1. பெயர்:  
காயு Gaius of Macedonia
மாசிதோனியாவானாகிய காயு

2. அர்த்தம்: 
மகிழ்ச்சியடைபவர்

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 19:29 – எபேசு பட்டணத்தில் ஏற்பட்ட பெரும் குழப்பத்தின்போது, பவுலின் பிரயாணத் தோழர்களான மாசிதோனியராகிய காயுவும் அரிஸ்தார்குவும் கூட்டத்தினரால் பலவந்தமாய் அரங்குக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.

4. வரலாற்றுக் குறிப்புகள்
• காயு மாசிதோனியா தேசத்தைச் சேர்ந்தவர். 
• அப்போஸ்தலனாகிய பவுலின் சுவிசேஷப் பிரயாணங்களில் விசுவாசமுள்ள உடனுழைப்பாளராகவும் பிரயாணத் தோழராகவும் பயணித்தவர்.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
எபேசுவில் தெமேத்திரியு என்பவனால் தியானா தேவியின் சுரூபச் சிலை தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறித் தொடுக்கப்பட்ட கலகத்தில், பவுலின் உயிருக்கு ஆபத்து வராதபடி இவரும் அரிஸ்தார்குவும் கலகக்காரர்களின் கைகளில் பிடிபட்டனர். சுவிசேஷத்திற்காக உயிரையும் பொருட்படுத்தாமல் துன்பங்களைச் சந்திக்கத் துணிந்த விசுவாசி. சுவிசேஷப் பணியில் நன்மைகளும் வெற்றிகளும் கிடைக்கும்போது மட்டுமல்ல, துன்பமும் ஆபத்தும் சூழும் கடினமான நேரங்களிலும் தேவ ஊழியர்களோடும் சபையோடும் இணைந்து நிற்பதே உண்மையான சீஷத்துவ தோழமை.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Post a Comment

0 Comments