50 கேள்விகள் - அப்போஸ்தலர் புத்தகம்
If you want answers to these questions, WhatsApp us on 9486 810 915...
1. அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் யாருக்கு எழுதப்பட்டது?
2. இயேசு கிறிஸ்து பரமேறிச் சென்ற மலை எது?
3. யூதாசுக்குப் பதிலாகத் தெரிந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலன் யார்?
4. பரிசுத்த ஆவி பொழியப்பட்ட பண்டிகை நாள் எது?
5. பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டு அன்று ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேர்?
6. தேவாலயத்தின் எந்த வாசலில் சப்பாணி உட்கார்ந்திருந்தான்?
7. இயேசுவின் நாமத்தினால் நடக்கப்பண்ணப்பட்ட சப்பாணி எத்தனையாவது வயதிற்கு மேற்பட்டவன்?
8. நிலத்தை விற்றுப் பொய் சொல்லி மரித்துப் போன தம்பதியர் யார்?
9. ஆறுதல் மகன் என்று அழைக்கப்படுபவர் யார்?
10. பரிசேயருக்குள்ளே கனம்பெற்ற நியாயசாஸ்திரி யார்?
11. சபையில் உதவி செய்ய எத்தனை பேர் தெரிந்தெடுக்கப்பட்டார்கள்?
12. விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்திருந்த முதல் இரத்தசாட்சி யார்?
13. எருசலேமிலிருந்து சமாரியாவுக்குப் போய் பிரசங்கித்தவர் யார்?
14. சமாரியாவில் மாயவித்தை செய்தவன் யார்?
15. எத்தியோப்பிய மந்திரி வாசித்த தீர்க்கதரிசன புத்தகம் எது?
16. சவுல் எந்த ஊருக்குச் செல்லும் வழியில் ஆண்டவரைச் சந்தித்தார்?
17. சவுலுக்காக ஜெபிக்கும்படி ஆண்டவரால் அனுப்பப்பட்டவர் யார்?
18. பேதுருவால் உயிரோடு எழுப்பப்பட்ட பெண் (தபீத்தாள்) யார்?
19. செசரியாவிலிருந்த இத்தாலியா பட்டாளத்தைச் சேர்ந்த நூற்றுக்கு அதிபதி யார்?
20. பேதுரு எந்த ஊரில் தரிசனம் கண்டார்?
21. சீஷர்கள் முதல்முதலாக கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்ட இடம் எது?
22. ஏரோது ராஜா யாரைப் பட்டயத்தினால் கொன்றான்?
23. பேதுரு சிறையிலிருந்து தப்பியபோது கதவண்டை வந்த பெண் யார்?
24. பவுலோடு முதல் மிஷனரி பயணத்தில் சென்றவர் யார்?
25. பவுலால் குருடாக்கப்பட்ட மாயவித்தைக்காரன் யார்?
26. பவுலை மக்கள் தேவன் என்று எண்ணி பலியிட முயன்ற ஊர் எது?
27. யூதருக்கும் புறஜாதிகளுக்கும் உள்ள சிக்கலைத் தீர்க்க நடந்த சங்கம் எங்கே கூடியது?
28. இரண்டாவது பயணத்தில் பவுலுடன் சென்றவர் யார்?
29. பவுல் லீஸ்திராவில் கண்ட இளம் சீஷன் யார்?
30. பவுலுக்கு மாசிடோனியா நாட்டு மனுஷன் தரிசனமான இடம் எது?
31. பிலிப்பு பட்டணத்தில் இரத்தாம்பரம் விற்கிற ஸ்திரீ யார்?
32. பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் எப்போது பாடினார்கள்?
33. மிகுந்த மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் வாழ்ந்த ஊர் எது?
34. அத்தேனே பட்டணத்தில் பவுல் எங்கே நின்று பிரசங்கித்தார்?
35. பவுல் கொரிந்து பட்டணத்தில் தங்கியிருந்த தம்பதியர் யார்?
36. கொரிந்துவில் பவுலின் தொழில் என்ன?
37. எபேசுவில் கர்த்தருடைய வழியைப் போதித்த கற்றறிந்தவன் யார்?
38. எபேசுவில் தியாள் தேவியின் கோவில் கட்டிய தட்டான் யார்?
39. துரோவாவில் பவுல் பிரசங்கித்தபோது ஜன்னலில் அமர்ந்து விழுந்த வாலிபன் யார்?
40. பவுல் எருசலேமுக்குச் சென்றால் கட்டப்படுவார் என்று அடையாளம் காட்டிய தீர்க்கதரிசி யார்?
41. பவுல் எந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்?
42. பவுலை விசாரித்த ரோம அதிபதி (Governor) யார்?
43. பேலிக்ஸைத் தொடர்ந்து வந்த அதிபதி யார்?
44. பவுல் தன் தரப்பு நியாயத்தைச் சொன்ன ராஜா யார்?
45. பவுலை ரோம் நகருக்கு அழைத்துச் சென்ற நூற்றுக்கு அதிபதி யார்?
46. பவுல் கப்பல் சேதமடைந்து கரை ஒதுங்கிய தீவு எது?
47. மெலித்தா தீவில் பவுலைக் கடித்த விஷப்பூச்சி எது?
48. மெலித்தா தீவின் முதன்மையான மனுஷன் யார்?
49. பவுல் ரோமாபுரியில் எத்தனை வருடம் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்?
50. அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை எழுதியவர் யார்?
இந்த கேள்விகளுக்கு பதில் வேண்டுமென்றால் 9486 810 915 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும்.
Bible Questions in Acts

0 Comments