கமாலியேல்: நிதானமாய் முடிவெடுப்போம்
1. பெயர்: கமாலியேல் • Gamaliel
2. அர்த்தம்:
கடவுள் எனது வெகுமதி
3. சிறுகுறிப்பு:
• கமாலியேல் பரிசேயர்களின் பிரிவைச் சேர்ந்தவர்.
• திருச்சட்டத்தின் அடிப்படையில் போதிக்கும் தலைசிறந்த போதகருமாவார்.
• இவர் யூதர்களின் உயர்ந்த ஆலோசனைக் சங்கமான சனகெரின் (Sanhedrin) சபையில் ஒரு முக்கியமான உறுப்பினராகத் திகழ்ந்தார்.
• மக்களிடையே மிகுந்த மரியாதையும் செல்வாக்கும் பெற்ற ஒரு தலைவர்.
• பவுல் (சவுல்) இவருடைய பாதண்டடியில் உட்கார்ந்து கடுமையான முறையில் மதச் சட்டங்களைக் கற்றறிந்த மாணவராவார்.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
அப்போஸ்தலர்கள் மீது தலைவர்கள் கோபம்கொண்டு அவர்களைக் கொலை செய்ய முயன்றபோது, கமாலியேல் ஞானத்தோடு நடுநிலையாக நின்று ஆலோசனை வழங்கினார்: "இது மனிதனால் உண்டாயிருந்ததானால் தானாய் அழிந்துபோகும்; கடவுளால் உண்டாயிருந்ததானால் அதை அழிக்க உங்களால் கூடாது; ஒருவேளை நீங்கள் கடவுளோடு போராடுகிறவர்களாய் இருக்க நேரிடும்" என்று கூறி அப்போஸ்தலர்களின் உயிரைக் காப்பாற்ற உதவினார். அவசரப்பட்டு கோபத்தினால் எடுக்கும் முடிவுகளை விட, அமைதியாகவும் நிதானமாகவும் யோசித்து செயல்படும் ஞானம் ஒரு தலைவனுக்கு மிகவும் அவசியமானது. கடவுளின் திட்டத்தை மனிதர்களால் தடுத்துவிட முடியாது என்ற உண்மையை இவருடைய வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
அப்போஸ்தலர் 5:34 - 39 அப்போஸ்தலர் 22:3
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments