Ad Code

தெயுதாஸ் • Theudas • Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 57
 தெயுதாஸ்: கடவுளால் கொடுக்கப்படாதது நிலைக்காது

1. பெயர்: தெயுதாஸ் • Theudas

2. அர்த்தம்: 
கடவுளால் கொடுக்கப்பட்டவர்" (God-given) அல்லது "தியோதோரோஸ்" (Theodorus) என்ற பெயரின் சுருக்கம்.

3. சிறுகுறிப்பு: 
• இவர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு யூத கலகக்காரர் 
• தன்னைத்தானே ஒரு பெரிய மனிதனாகப் பெருமைப்படுத்திக் கொண்டு, சுமார் நானூறு பேரைத் தன் பின்னால் திரட்டிக்கொண்டார்.
• ரோமப் பேரரசுக்கு எதிராக யூதர்களைத் தூண்டிவிட்டு, தன்னை ஒரு தலைவனாக அறிவிக்க முயன்றார்.
• ரோம ஆளுநரான கூஸ்பஸ் பராபஸ் (Cuspius Fadus) என்பவரின் காலத்தில் குதிரைப்படையை அனுப்பி இவரைக் கொன்றனர்; இவரைப் பின்பற்றியவர்கள் சிதறடிக்கப்பட்டனர்.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
பெயரளவில் இவர் "கடவுளால் கொடுக்கப்பட்டவர்" போல் காட்டிக்கொள்ள முயன்றாலும், இவருடைய கலகமும் செயல்களும் தேவனிடமிருந்து வந்தவை அல்ல; முற்றிலும் மனுஷப் பெருமையாலும் சுய விருப்பத்தினாலும் உருவாக்கப்பட்டவை.
அதனால்தான் காமிலியேல் குறிப்பிட்டது போல, இவரால் தொடங்கப்பட்ட இயக்கம் நிலைநிற்கவில்லை; வெகு சீக்கிரமே அழிக்கப்பட்டு இழிவான முடிவைச் சந்தித்தது.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
அப்போஸ்தலர் 5:36

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments