டோபமைன் (Dopamine) என்பது மூளையில் இன்பம் மற்றும் வெகுமதியைக் கொடுக்கும் டோபமைன் இரசாயனம் (வேதிப் பொருள்).
டோபமைன் அடிமைத்தனம் (Dopamine Addiction) என்பது மூளையில் இன்ப உணர்வை ஏற்படுத்தும் வேதிப்பொருளான டோபமைனை (Dopamine) அதிகம் சுரக்கச் செய்யும் செயல்களுக்கு (சமூக ஊடகங்கள், சூதாட்டம், போதைப்பொருள், உணவுகள்) ஒருவர் அடிமையாவதாகும். டோபமைன் நேரடியாக அடிமைப்படுத்தாது, ஆனால் அதைப் பெருக்கும் சமூக ஊடகங்கள் பயன்பாடு, மூளையில் "டோபமைன் அவசரத்தை" (Dopamine rush) உருவாக்கி, மீண்டும் மீண்டும் அந்த செயல்களைச் செய்ய தூண்டி, அடிமைத்தனத்தை வலுப்படுத்துகின்றன. இந்த அதிகப்படியான பயன்பாடு மூளையின் வெகுமதி மையத்தை "ஓவர்லோட்" செய்கிறது. இதனால் மூளையின் இயல்பான சமநிலை பாதிக்கப்பட்டு, அடிமையாக்கும் செயல்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
டோபமைன் உணர்வை உண்டாக்கும் செயல்கள்:
• சமூக ஊடகங்களை அடிக்கடி பார்ப்பது (Screen Scrolling).
• வீடியோ கேம்ஸ் விளையாடுவது.
• சூதாட்டம்.
• சர்க்கரை அல்லது அதிக சுவை கொண்ட உணவுகளை உண்பது.
மனம்சார் அறிகுறிகள்: Symptoms
• தீவிரமான ஆசை (Cravings)
• மனக்கிளர்ச்சி
• தூண்டுதல்களைக் கட்டுப்படுத்த முடியாமை
• பழையபடி இன்பம் உணர அதிகப்படியான தூண்டுதல் தேவைப்படுதல் (Tolerance)
• குறைந்த உந்துதல் மற்றும் உற்சாகமின்மை.
வெளிப்புற அறிகுறிகள்:
• சமூக ஊடகங்கள் மற்றும் கேமிங் அதிக பயன்பாடு (Scrolling)
• போதைப்பொருட்களுக்கு அடிமையாதல்.
பின்விளைவுகள்: Side Effects
மூளையில் டோபமைன் அளவு குறையும் போது ஏற்படுவது:
• அதிக தூக்கம்
• கவனமின்மை
• ஆக்ரோஷமான குணம்
• உயர் இரத்த அழுத்தம்
• மனநல கோளாறுகள்
தவிர்க்கும் முறைகள்: How to Overcome
• டோபமைன் டிலாக்ஸ் (Dopamine / Digital Detox): சமூக ஊடகம் மற்றும் தேவையற்ற கேமிங் போன்றவற்றைச் சிறிது காலம் தவிர்ப்பது.
• உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, மற்றும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல்.
• கடுமையான போதைத்தன்மை இருந்தால் மருத்துவர் அல்லது மனநல ஆலோசகரை அணுகுதல்
எப்படி செயல்படுத்துவது? Pratical Tips
டோபமைன் டீடாக்ஸ் செய்ய உதவும் சில வழிகள்:
• ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைத்தல், காலையில் எழுந்தவுடன் முதல் 1 மணிநேரம் போனைப் பார்க்காமல் இருத்தல். அல்லது ஒரு நாளில் பயன்படுத்தும் நேரம் இது மட்டும் என்று வரையறை வைத்தல்.
• இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற செயலிகளை சில நாட்களுக்குப் பயன்படுத்தாமல் இருத்தல். இந்த மணி நேரத்தில் மட்டும் பார்க்க கட்டுப்பாடு வைத்தல்
• பயனுள்ள பொழுதுபோக்குகளில் நேரம் செலவழித்தல். புத்தகம் வாசித்தல், நடைப்பயிற்சி, நண்பர்களுடன் பேசுதல்.
டோபமைன் டீடாக்ஸின் நன்மைகள் என்ன?
• மேம்பட்ட கவனம் மற்றும் உற்பத்தித்திறன்
• வலுவான உணர்ச்சி கட்டுப்பாடு
• சிறந்த தூக்கம் மற்றும் பதட்டம் குறைதல்
• எளிய விஷயங்களில் மகிழ்ச்சியை மீண்டும் கண்டறிதல்
• சுய விழிப்புணர்வு மற்றும் நினைவாற்றல் வலுப்படுத்தப்படும்.
For the guidance....
Meyego Nouthesia

0 Comments