1. பெயர்:
ஸ்தேவான் • Stephen
2. அர்த்தம்:
கிரீடம் (Crown)
3. சிறுகுறிப்பு:
• ஆதித் திருச்சபையில் முதல் ஏழு திருத்தொண்டர்களில் (Deacons) ஒருவர்.
• இவர் கிருபையும் வல்லமையும் நிறைந்தவராய், மக்களிடையே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்.
• திருச்சபையின் வரலாற்றில் முதல் கிறிஸ்தவ மறைசாட்சி (Martyr)
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
இயேசு கிறிஸ்துவே மெய்யான மேசியா என்று தைரியமாக நற்செய்தி அறிவித்ததால் யூதர்களால் எதிர்க்கப்பட்டார். தீவிரமான எதிர்ப்புகளும் மரண பயமும் சூழும்போதும்கூட, சத்தியத்துக்காகவும் இயேசு கிறிஸ்துவுக்காகவும் துணிச்சலாக சாட்சி பகிர்ந்தார். மேலும், தன்னைத் துன்புறுத்துபவர்களைக் கூட மனதார மன்னிக்கும் குணத்தையும், கடைசி மூச்சு வரை கர்த்தரைப் பற்றிக்கொள்ளும் அசைக்க முடியாத விசுவாசத்தையும் இவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
அப்போஸ்தலர் நடநடிகள் 6 மற்றும் 7-ஆம் அதிகாரங்கள்
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments