திருமறையில் யார் இவர் யாரோ? - 77
சிமியோன்: சபையில் அனைவரும் சமம்
1. பெயர்: சிமியோன் Simeon (Niger)
2. அர்த்தம்:
கேட்டல் அல்லது கடவுள் செவிகொடுத்தார்
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 13:1 — அந்தியோகியா சபையிலிருந்த தீர்க்கதரிசிகளிலும் போதகர்களிலும் ஒருவராகச் சிமியோன் குறிப்பிடப்படுகிறார்.
அப்போஸ்தலர் 13:2-3 - தூய ஆவியானவர் பர்னபாவையும் சவுலையும் (பவுல்) முதலாவது மிஷனரி பயணத்திற்காகப் பிரித்தெடுத்து அனுப்பிய உபவாச ஜெபக் கூட்டத்தில் சிமியோன் முன்னணித் தலைவர்களில் ஒருவராகப் பங்குபெற்றார்.
4. வரலாற்றுக் குறிப்புகள்
• சிமியோன் அந்தியோகியாவில் ஒரு தீர்க்கதரிசியாகவும் போதகராகவும் பட்டியலிடப்பட்டுள்ளார், இது அவர் ஒரு முக்கிய ஆவிக்குரிய தலைவராக இருந்தார் என்பதைக் காட்டுகிறது.
• இலத்தீன் மொழியில் "நிகெர்" என்ற சொல்லுக்கு "கருப்பு" என்று பொருள். இந்தப் பட்டப்பெயர் அவருடைய கருநிறத் தோலையோ அல்லது ஆப்பிரிக்கப் பின்னணியையோ குறிப்பதாக அறிஞர்கள் நம்புகின்றனர்.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
ஆதித் திருச்சபையான அந்தியோகியாவில் ஆப்பிரிக்கப் பின்னணி கொண்ட சிமியோன் ஒரு முக்கிய ஆவிக்குரிய தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டது, இறைப் பார்வையில் அனைவரும் சமம் என்பதைக் காட்டுகிறது. யூதர்கள், கிரேக்கர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்கள் போன்ற பல்வேறு இன மக்களையும் கலாச்சாரங்களையும் உள்ளடக்கிய ஒரு சர்வதேசச் சபையாகத் திகழ்ந்தது என்பதை இவருடைய இருப்பு காட்டுகிறது.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments