Ad Code

மண்பாண்டங்களில் செல்வம் • 2 கொரிந்தியர் 4:7 • Ministry of Paul • CSI Diocese of Tirunelveli

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு: திரித்துவ திருநாளுக்குப் பின்வரும் 23 ஆம் ஞாயிறு
தேதி: 12 நவம்பர் 2023
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்: 
மீகா 6. 1 - 8
2 கொரிந்தியர் 4. 7 - 15
மாற்கு 4. 26 - 29
சங்கீதம்: 106 . 1 - 12

2. திருவசனம் & தலைப்பு 
     மண்பாண்டங்களில் செல்வம் 
            2 கொரிந்தியர் 4:7
     (பவர் திருப்புதல்) இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். 
     (திருவிவிலியம்) இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுளுக்குகே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது. 

3. ஆசிரியர் & அவையோர்
2 கொரிந்தியர் நிருபம் தூய பவுல் அப்போஸ்தலர் அவர்களால் தீமோத்தேயு என்பவரின் துணையோடு எழுதப்பட்டது. ( 2 கொரி:1:1) இது பவுல் கொரிந்தியருக்கு எழுதின நான்காவது கடிதம் என்று நம்பப்படுகிறது. கொரிந்துவில் காணப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு நல் வழிகாட்ட இந்த நிருபம் எழுதி அனுப்பப்பட்டது. 

4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
மக்கெதோனியாவிலிருந்து, கிபி 55-57 ஆகிய ஆண்டுகளின் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த கடிதம் எழுதப்பட்டது என கணக்கிடப்படுகிறது. கொரிந்து மற்றும் அதைச் சுற்றியுள்ள தனது சபைகளில் தூய பவுல் அப்போஸ்தலர் தொடர்பில் இருந்ததையும், அவற்றின் வரலாறு, தன்மை மற்றும் பிரச்சனைகளை நன்கு அறிந்திருந்ததையும் இந்தக் கடிதங்கள் பிரதிபலிக்கின்றன. இங்கு தூய பவுல், தேவனோடே ஒப்புரவாகுதலின் முக்கியத்துவத்தை விசுவாசிகளுக்கு கற்பிக்கிறார். 

2 கொரிந்தியர் 4 ஆம் அதிகாரம் பவுல் கடவுளிடம் இருந்து பெற்ற அப்போஸ்தல ஊழியத்தின் முக்கியத்துவம் குறித்து பேசுகின்றார். "Paul is exhorting his readers that, even though there is great difficulty in their ministry, he is encouraged" (2 Corinthians 4:1). 

5. திருவசன விளக்கவுரை 
2 கொரிந்தியர் 4.7 இல் நாம் நிதானித்து சிந்திக்க வேண்டிய மூன்று முக்கிய பதங்கள் உள்ளன. 

1. பொக்கிஷம் (செல்வம் - Treasure) - கிறிஸ்துவின் மூலம் வெளிப்பட்ட நற்செய்தியை அறிவிப்பதற்காக அருளப்பட்ட இறைப்பணியைக் குறிக்கிறது. "The treasure,Paul is referencing is the light of the gospel, the message of Jesus and the glory of God reflected in Jesus" 2 கொரி 4. 5 & 6 வசனங்களை வாசிக்கும் போது இதை அறிய முடியும். நற்செல்வமாகிய நற்செய்தியை அறிவிக்கும் உன்னத திருப்பணியும் கடவுள் கொடுத்த உன்னத செல்வமே. இந்த பொக்கிஷத்தை தான் "மகத்துவமிக்க வல்லமை" என்று 7 ஆம் வசனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2. மண்பாண்டம் (Earthen Vessel made by clay) - இது இயற்கையின் சாரம்சத்தில், குறிப்பிடப்பட்டாலும், நிரந்தரமற்ற தன்மையை குறிக்கிறது. இது மனித சரீரத்தை குறிக்கிறது. குறிப்பாக கடவுளின் ஊழியர்களை பவுல் குறிப்பிட்டுள்ளார். ஊழியர்கள் கடவுளின் திருக்கரத்திலுள்ள மண்பாண்டங்கள். 

3. பெற்றிருக்கிறோம் (Recieved) - திருப்பணியை நான் தெரிவு செய்து செய்து வருகிறேன் என்பது சரியல்ல; மாறாக, திருப்பணி செய்யும் என்பது வாய்ப்பை பெற்றுள்ளேன் என்பதே சரியாகும். "ஊழியம் என்பது கடவுள் கொடுத்த செல்வம்; நாம் உருவாக்கிக் கொண்ட பொக்கிஷம் அல்ல. இதைத் தான் பவுல், இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுளுக்குகே உரியது என்று எழுதியுள்ளார். ஊழியத்தை கடவுளிடம் பெற்றிருக்கிறோம். நாம் அவருக்கே கணக்கு ஒப்புவிக்க வேண்டும். 2 கொரி. 3. 5 & 6 வசனங்களில் ஊழியரின் தகுதி எப்படி வருகிறது என்று பவுல் குறிப்பிட்டுள்ளார்.

6. இறையியல் & வாழ்வியல்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் ஊழியம் செய்யும் பலர் இது கடவுள் கொடுத்த பணி என்று எண்ணாமல், செயல்படுவது போல், அவர்களுடைய செயல்பாடுகள் காண்பிக்கின்றன. ஆம், பதவியைத் தேடி ஓடுவது, பிரசங்க மேடைகளை பெற நாடுவது, பொருளாதார நன்மைகளை மட்டும் நாடி செல்வது என பலவிதங்களில் இறை பணியை கொச்சைப்படுத்தும் செயல்கள் நடந்தவாறே உள்ளன. இவை சீர்திருத்தப்பட வேண்டும்.

அதே நேரத்தில் ஊழியம் மற்றும் ஊழியர்கள் குறித்த கண்ணோட்டமும் மக்கள் மத்தியில் மாறி வருவதை நாம் உணர வேண்டும். ஊழியம் என்பது என்ன என்றும், ஊழியர்களின் முக்கியத்துவம் குறித்தும் மக்களுக்கு, திருமறை அடிப்படையில் சரியான தெளிவான விழிப்புணர்வு கொடுக்கப்பட வேண்டும்.

7. அருளுரை குறிப்புகள்
      மண்பாண்டங்களில் செல்வம்
1. மண்பாண்டங்களே கடவுளின் படைப்பு
2. ஊழியம் கடவுள் கொடுத்த செல்வம்
3. பிறருக்காக பயன்படுத்தவே செல்வம் 

            எழுதியவர்
திரு. யே. கோல்டன் ரதிஸ்
சபை ஊழியர்
இராமையன்பட்டி
சி.எஸ்.ஐ. திருநெல்வேலி திருமண்டலம்.

Post a Comment

0 Comments