Ad Code

ஞாயிறு பாடசாலை வரலாறு • Sunday School History • Children's Bible School

முகவுரை
ஞாயிறு பாடசாலை என்பது சிறுவர்களுக்கான கிறிஸ்தவ அமைப்பு ஆகும். இது மாணவர்களுக்கு நல்வழிகாட்டும் கலங்கரை விளக்கம் போன்றது. இந்த ஞாயிறு பாடசாலை அமைப்பின் வரலாற்றை இந்த பதிவில் படிப்போம்.

தோற்றம்
துவக்கத்தில் சிறு பிள்ளைகளுக்கு என சிறப்பு வேதப் பாட வகுப்புகள் நடைபெற்றதாக சிலர் கருதுகின்றனர். ஆனால் அவை ஞாயிறு பள்ளி என்று அழைக்கப்பட்டதா என்பது கேள்விக்குறி. ஞாயிறு பாடசாலை முதன்முதலில் வில்லியம் கிங் என்பவரால் 1751 ஆம் ஆண்டு க்ளௌசெஸ்டர்ஷையரில் உள்ள டர்ஸ்லியில் தொடங்கபோட்டது என்று அறியப்பட்டுள்ளது. சில சபைகளில் ஞாயிறு பாடசாலை வகுப்புகள் நடைபெற்றதாக குறிப்புகள் வரலாற்றில் உள்ளன. 

ஆனால், ஞாயிறு பாடசாலை தந்தை என்றழைக்கப்படும் ராபர்ட் ரைக்ஸ் (Robert Raikes) அவர்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தினால் அவருக்கு தாகமும் ஞாயிறு பாடசாலை நிறுவப்பட காரணமாயிற்று. ஒரு நாள் வீதியில் அவர் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் அகோல நிலைமையை பார்த்து பரிதாபப்பட்டு நின்றார். அங்கு நின்றுக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம்.... ஏன் இந்த சிறுவர்கள் இவ்வளவு மோசமாக பேசுகின்றனர்? இவர்கள் இப்படி நெறியற்றே வாழ காரணம் என்ன? என்று வினவினார். அதற்கு அந்த பெண்: "இவர்கள் அடிமைகள் போல் பணியாற்றும் சிறுவர்கள். ஞாயிறு மட்டுமே இவர்களுக்கு விடுமுறை. ஆறு நாட்களும் கடினமாய் உழைக்கும் இவர்கள் இந்த நாளில் இவ்வளவு விலங்குகளை விட மோசமாக செயல்படுகின்றனர். இவர்கள் பிறருக்கு தொல்லையாக உள்ளனர். இவர்களை திருத்த முடியாது" என்று பதிலளித்தார்.

இந்த பதில் ராபர்ட் ரைக்ஸ் அவர்களைப் பாதித்தது. அந்த சிறுவர்களுக்கு நல்லது செய்ய விரும்பினார். ஆகவே 1781 இல் Gloucester இல் ஞாயிறு பள்ளியைத் தொடங்கினார். ஞாயிற்றுக்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் சிறு குழந்தைகளுக்கு அடிப்படை மற்றும் மதக் கல்வியை ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கினால், குற்ற வாழ்க்கையிலிருந்து தடுக்க முடியும் என்று அவர் முடிவு செய்தார். இது சிறுவர்களுக்கு வாசிப்பு, எழுதுதல், சைஃபரிங் (எண்கணிதம் செய்வது) மற்றும் பரிசுத்த வேதாகமம் பற்றிய அறிவு ஆகியவற்றைக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டது. 

வளர்ச்சி
ராபர்ட் ரைக்ஸ் தாம் ஆசிரியரான Gloucester இதழில் ஞாயிறு பள்ளி முக்கியத்துவம் குறித்த கட்டுரையை எழுதினார். இதன் விளைவாக பல குருவானவர்கள் இப்பள்ளிகளை ஆதரித்தனர். "சன்டே ஸ்கூல் சொசைட்டி" பாப்டிஸ்ட் டீக்கன் வில்லியம் ஃபாக்ஸால் 7 செப்டம்பர் 1785 இல் லண்டனின் பிரஸ்காட் ஸ்ட்ரீட் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் நிறுவப்பட்டது . போதகர் தாமஸ் ஸ்டாக் மற்றும் ரைக்ஸ் ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான நூறு குழந்தைகளை இவ்வாறு பதிவு செய்துள்ளனர். இந்த அமைப்பு பாடப்புத்தகங்களை வெளியிட்டு கிட்டத்தட்ட 4,000 ஞாயிறு பள்ளிகளை ஒன்றிணைத்துள்ளது. 

1785 இல், 250,000 ஆங்கிலக் குழந்தைகள் ஞாயிறு பள்ளிக்குச் சென்றனர். மான்செஸ்டரில் மட்டும் 5,000 பேர் இருந்தனர் . 1835 வாக்கில், ஞாயிறு பள்ளி சங்கம் 91,915 எழுத்துப் புத்தகங்கள், 24,232 புதிய ஏற்பாடுகள் மற்றும் 5,360 திருமறைகளை விநியோகித்தது. இவ்வாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் மிஷனரிகள் மூலம் இந்த ஞாயிறு பாடசாலை அமைப்பு அவர்கள் ஸ்தாபித்த சபைகளில் கொண்டு செல்லப்பட்டது என்றால் மிகையாகாது. நவம்பர் முதல் ஞாயிறு ஞாயிறு பாடசாலை ஞாயிறு என்று சிறப்பாக ஆசரிக்கப்படுகிறது.

நிறைவுரை
இந்த நாட்களில் எல்லா சபைகளும் தங்களுக்கு ஞாயிறு பாடசாலை அமைப்பினை வைத்து சிறப்பு பாடத் திட்டங்களோடு செயல்படுத்தி வருகின்றன. ஞாயிறு பாடசாலை பரிசுத்த வேதாகமம் மற்றும் கிறிஸ்தவ வாழ்வு கொள்கைகளை கற்பிப்பதற்கான முதன்மையான கருவியாக இருந்து வருகிறது.  ஞாயிறு பள்ளி எதிர்காலத்தில் தேவாலயத்திற்கு தோள்கொடுக்க தலைமுறையை வடிவமைக்கும் பணியைத் தொடர்கிறது என்றால் மிகையாகாது. 

தொகுப்பு
மேயேகோ

Post a Comment

0 Comments