Ad Code

கையின் பிரயாசங்களில் ஆசீர்வாதம் • 5 Nov 2023 • CSI Diocese of Tirunelveli

1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: பெந். திரு.நாள். பின். 23-ம் ஞாயிறு (திரித்துவ 22). 
தேதி: 05/11/2023
வண்ணம்: பச்சை
திருமறை பாடங்கள்:
சங்கீதம்:

2. திருவசனம் & தலைப்பு
 கையின் பிரயாசங்களில் ஆசீர்வாதம்
       கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார். உபாகமம் 28:8 ( பவர் திருப்புதல்)
           உன் களஞ்சியங்களிலும், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் நீ ஆசி பெறும்படி ஆண்டவர் ஆணையிடுவார். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் நீ ஆசி பெற்றிடுவாய். இணைச் சட்டம் 28:8 ( திருவிவிலியம் )

3. ஆசிரியர் & அவையோர்
 இந்தப் புத்தகத்தை எழுதியவர் மோசே. இதற்கான அக புறச் சான்றுகள் அநேகம் இருக்கின்றன.மோசேயின் மரணத்திற்கு பின்னான பகுதிகள் யோசுவா மூலம் எழுதப்பட்டது என்று கருதப்படுகிறது.
உபா. 1:1-5; 4:44-46; 29:1; 31:9, 31; 24-26. வாக்குத்தத்த நாட்டில் நுழையயிருந்த புதிய இஸ்ரவேல் தலைமுறையினருக்கு மோசே மூலம் எழுதப்பட்டது 

4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
கிமு 1406-ல் இந்தப் புத்தகம் எழுதப்பட்டது என்று கருதப்படுகிறது.
120 வயது முதிர்ந்த மோசே தனது 40 ஆண்டு கால பாலைவன பயணத் தருவாயில், வாக்குத்தத்த நாட்டை சொந்தமாக்க ஆயத்தமாய் இருக்கும் இரண்டாம் தலைமுறையினரான இஸ்ரவேலரை வழியனுப்பும் செய்தி தொகுப்பே இந்த உபாகம புத்தகம்.

5. திருவசன விளக்கம் 
இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்துக்குள் நுழைவதற்கு முன்பாக, ஆண்டவர் அவர்களுடைய எதிர்காலத்தில் அவர்களோடு ஏற்படுத்தப் போகிற உடன்படிக்கையைக் குறித்து பேசும்போது, ஆசிர்வாதம் மற்றும் சாபத்தை குறித்ததான புத்திமதியை கூறுகிறார் இது உபாகமம் 28-ம் அதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. ஆண்டவர் இந்த உடன்படிக்கையை குறித்து மோவாபின் சமவெளியில் மோசேயின் மூலம் இஸ்ரவேல் ஜனங்களோடு பேசுகிறார்.

உபாகமம் 28-ம் அதிகாரத்தில் ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் குறித்து மையமாக எழுதப்படுள்ளது. வசனம் 1-இல் இஸ்ரவேல் ஜனங்கள் ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்படியும்போது அவர்களை ஆசீர்வதிப்பேன் என்கிற நிபந்தனையை ஆண்டவர் ஏற்ப்படுத்துகிறார். இந்த நிபந்தனை தான் இந்த முழு அதிகாரத்தின் சாராம்சத்தையும் உள்ளடக்கியுள்ளது.

வசனம் 8-இல் குறிப்பாக அவர்கள் வேலை செய்யும் இடத்தையும், அதன் மூலம் வரும் விளைச்சலின் பலனை (வருமானத்தை) சேர்த்து வைக்கும் இடத்தையும் என் கட்டளைகளுக்கு கீழ்படியும் போது  ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் வாக்குத்தத்தம் செய்கிறார்.

6. இறையியல் & இன்றைய நிலை
இன்றைய காலத்தில், வாக்குத்தத்தத்தை பேசும்பொழுது அதற்க்கு இணையாக நாம் கீழ்ப்படியும் படி ஆண்டவர் கொடுத்திருக்கிற கட்டளைகளை மறந்து மூட நம்பிக்கை போன்று வாக்குதத்தத்தை நாம் நம்பி கொண்டிருக்கிறோம். ஆனால் வாக்குத்தத்தம் உள்ளடக்கியிருக்கிற கட்டளைக்கு கீழ்படியும் போது மட்டும் தான் அந்த வாக்குத்தத்ததம் நம் வாழ்க்கையில் நிறைவேறும்.

7. அருளுரை குறிப்புகள்

எழுதியவர்
திரு. ரெபின் ஆஸ்டின்
சபை ஊழியர்
கல்லிடைக்குறிச்சி

Post a Comment

0 Comments