இறைவன், கடவுள், தூய ஆவி, தவக்காலம், புனிதர், இறையாசி, வழிபாடு மற்றும் பல தமிழ் வார்த்தைகள் கத்தோலிக்க (RC) வார்த்தைகள் என்பது சரியா?
நாம் அன்றாடம் பயன்படுத்தும் புத்தகங்களில்....
1. மிஷனரியான ஹென்றிக்ஸ் இறைவன் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர்.
2. ராபர்ட் டி நொபிலி, சீகன் பால்க் போன்ற மிஷனரிகள் கடவுள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர்.
3. நம் பராம்பரிய ஜெப புத்தகத்தில் "கடவுள்". என்ற வார்த்தை உள்ளது (பக்கம் 26, 72).
4. கீதங்களும் கீர்த்தனைகளும் பாடல் புத்தகத்தில் "தபசு காலம்" என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது (பக்கம் 106 முதல்).
5. கன்வென்சன் கீதத்தில் இறைவன் என்ற வார்த்தை உள்ள பழைய பாடல்களில் வருகிறது (பாடல் எண் ).
6. கீதங்களும் கீர்த்தனைகளும் பாடல் புத்தகத்தில், சீடர்களுக்கு "புனிதர்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது (பாடல் 323 முதல்)
7. சீகன் பால்கு வெளியிட்ட வேதத்தில் கடவுளை அவர் ‘சருவேசுரன்’ என்றும், இயேசுவை சுதனாகிய ஏசு என்றும் குறிப்பிட்டுள்ளார் (1713).
8. ஃபேப்ரிசியஸ் என்ற மிஷனரி வெளியிட்ட வேதாகமத்தில் தேவன் என்பதற்கு, பராபரன் என்று பயன்படுத்தியுள்ளார் (1812).
இறைமைந்தர் - தேவ குமாரன் இயேசு என்று பிற மதத்தார் சொல்ல யோசிப்பார்கள். இப்போது, கிறிஸ்தவர்களும், ஆண்டவர் என்று சொன்னால் போதும், ஏன் இறைமைந்தர் என்று சொல்ல வேண்டும் என்று கேட்கும் போது, இயேசுவின் தெய்வீகத் தன்மையை புரியாதவர்கள் போல் இருக்கிறது.
"மொழிகளில் சபைப் பிரிவுகள் இல்லை." சபைகளுக்கு என்று வார்த்தை பிரிவினை கொண்டு வரும் சாத்தானின் வேலையாள்களா நீங்கள்? இந்த வார்த்தைகள் RC அல்லது பிற சபை வார்த்தைகள் அல்ல. இவை நம் தாய்மொழி தமிழ் என்பது புரிந்தால் சரி. இந்த தமிழ் வார்த்தைகள் நாம் பயன்படுத்தும் பாரம்பரிய புத்தங்களில் உள்ளனவே. அதை புரிந்துகொள்ள சக்தி இல்லையா? அல்லது இன்னும் பிடிவாதம் எனும் பழைய நிலையில் நின்று, தமிழ் பேசும் நபர்களைக் குறைகூற போகிறீர்களா?
எழுதியவர்
மேயேகோ

0 Comments