ஞாயிறு: திரித்துவதிருநாளுக்குப் பின்வரும் 16 ஆம் ஞாயிறு
தேதி: 08/09/2024
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்:
சங்கீதம்:
2. திருவசனம் & தலைப்பு
உருவாக்கும் சிற்பிகள்
எஸ்றா 7:10
(பவர் திருப்புதல்) கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.
(திருவிவிலியம்)எஸ்றா 7:10 கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.
3. ஆசிரியர் & அவையோர்
எஸ்றா ஒரு ஆசாரியன் & வேத பாரகன் (Rabbi - Teacher). பாபிலோன் அடிமைத்தன விடுதலைக்கு பின், இரண்டாவது குழுவில் எருசலேமுக்கு வந்தவர். ஆவிக்குரிய சீர்த்திருத்தம் செய்தவர்.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
எஸ்றா கி.மு 458 இல் எருசலேம் வந்ததாக கூறப்படுகிறது. அந்தக் காலக் கட்டத்தில் இந்த வரலாற்றுப் புத்தகம் எழுதப்பட்டிருக்கும். பல எதிர்ப்புகள் மத்தியில், செருபாபேல் தலைமையில் நடந்த தேவலாய கட்டுமானப் பணியும், எஸ்றா செய்த ஆன்மீக பணியும் குறித்து இந்த நூலில் படிக்கலாம்.
5. திருவசன விளக்கவுரை
1. ஆராய்தல் 2. செய்தல் 3. உபதேசித்தல் - இந்த 3 வினை சொற்களும் இந்த வசனத்தில் இருப்பதை அறியலாம். கர்த்தரின் வேதத்தில் இருந்த கட்டளைகள், நீதி நியாயங்கள் குறித்து தன் இருதயத்தை பக்குவப்படுத்திய எஸ்றா செய்த 3 செயல்கள் தான் இவை.
கற்பதும் கற்பிப்பதும் இரண்டு கண்கள் போன்றவை. எஸ்றா அதை சரியாக புரிந்து செயல்படுத்தினார். எஸ்றா தன்னை ஒரு வேத பாரகனாக (Law Teacher) கடவுள் தெரிந்து கொண்டுள்ளார் என்பதை உணர்ந்து தம் பணியைத் தொடங்கினார்; சீர்த்திருத்த உபதேசங்களை கொடுத்து, நல்ல சேவை ஆற்றினார்.
Percept Austin says that "Learning involved not merely knowledge per se, but learning how to live. Teaching was not merely the transferring of information from teacher to student, but also the instilling of discipline."
கண்டித்து உணர்த்தி பேச எஸ்ராவுக்கு கடவுள் கொடுத்த தைரியம் இருந்தது. அதே நேரத்தில் அந்த வேத வசனத்தில் வல்லமையை அவர் ருசிபார்த்த அனுபவம் இருந்திருக்கும். ஆகவே தான் உறுதியாக அவரால் போதிக்க முடிந்தது.
6. இறையியல் & வாழ்வியல்
இன்று நாம் வாழும் சூழலில் கற்றுக்கொள்ளும் மனநிலை எப்படி குறைந்து வருகின்றதோ, அவ்வாறே பிறரை உருவாக்கும் தரமான சிற்பிகள் எண்ணிக்கையும் குறைவு. உதாரணமாக, இந்த ஆசிரியர் ஞாயிறு தினத்தில், கல்வியே வியாபாரமாக மாறிவிட்ட இந்த மோசமான சூழலை எடுத்துக் கொள்ளலாம்.
❓ அன்று நம் பெற்றோர் நம்மை அடித்து உருவாக்கினார்கள்; இன்று நாம் என்ன செய்கிறோம்?
❓ அன்று நம் பெற்றோர் எப்படி பழக வேண்டும் என்ற நல்ல பண்புகளை சொல்லி கொடுத்து வளர்த்தார்கள். இன்று ....
❓ அன்று நாம் வேதம் படிக்காவிட்டால் சாப்பாடு இல்லை. இன்று....
❓ அன்று நாம் அனாவசியமாக செலவு செய்யாமல் இருக்க கஷ்டம் தெரிந்து வளர்த்தார்கள்... இன்று நாம் என்ன செய்கிறோம் ❓❓❓
நாம் எப்படி உருவாக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்து, கிறிஸ்துவின் வழியில் நம் தலைமுறையை உருவாக்குவோம்.
7. அருளுரை குறிப்புகள்
உருவாக்கும் சிற்பிகள்
1. கற்றுக் கொண்டே (ஆராய்தல்) இருப்பவரால் சிறப்பாக கற்பிக்க (உருவாக்க) முடியும்
2. தன்னை செதுக்கிக் (பக்குவப்படுத்தி) கொண்டே இருப்பவரால் பிறரை உருவாக்க முடியும்
3. பிறர் மீது அன்புள்ளவர் பிறரை உருவாக்க தன் நேரத்தை கொடுப்பார்
0 Comments