Ad Code

பில்லி கிரஹாம் வாழ்வில் கண்ணீர் • Billy Graham

ஒரு முறை சுவிசேஷகர் பில்லி கிரஹாம் செய்தியளிக்கும்படி லண்டனில் ஒரு நற்செய்தி கூட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்திருந்தார்கள். ஆனால் அவர் இங்கே கூட்டம் நடத்த வரக்கூடாது என்று பயங்கரமான எதிர்ப்பு கிளம்பியது. "காஸ்பல் சர்க்கஸ் நடத்த பில்லி கிரஹாம் வருகிறார்" என்றெல்லாம் மீடியா, பத்திரிகை அவரை கிண்டல் செய்து சரமாரியாக எழுதினர். திருச்சபைகள் கூட அவரை எதிர்த்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரும், அவருடைய மனைவியும் கப்பலில் வந்து லண்டன் துறைமுகத்தில் இறங்கியவுடன் பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு எங்கள் லண்டனை மாற்ற வந்திருக்கிறீர்களே, உங்கள் அமெரிக்காவை மாற்றிவிட்டீர்களா? என்றெல்லாம் ஆளாளுக்கு பலவிதமான கேள்விகளைக் கேட்டு பரியாசம் செய்தார்கள். 

 துறைமுகத்திலிருந்து தாங்கள் செல்ல வேண்டிய பட்டணத்திற்கு இரயில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது இயேசுவே காரியங்கள் இப்படியிருக்கிறது, எப்படி நான் இங்கு போய் ஊழியம் செய்ய போகிறேன் என்று தேவனுடைய முகத்தை நோக்கிப்பார்த்தார். உடனே தேவன் வேதவசனத்தின் மூலம் அவரோடு பேசினார். உடனே அவர் ஆண்டவரே எந்தவிதமான போராட்டம் வந்தாலும் அவைகளை சகித்துக்கொள்ளக்கூடிய கிருபையை தாரும் என்று சொல்லி கண்ணீரோடு ஜெபித்தார்.

 இரயிலிலிருந்து அவர்கள் இறங்கிய போது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி நின்று அவர்களை ஆர்ப்பரித்து வரவேற்றார்கள். உனக்காக நான் எவ்வளவு மக்களை வைத்திருக்கிறேன் பார்த்தாயா? என்று அவரது உள்ளத்தில் தேவன் பேசினார். அதைக் கண்ட பில்லிகிரஹாமின் கண்களில் கண்ணீர் வழிந்தது. 

Post a Comment

0 Comments