1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: கிறி . பிற. திரு. பின். 6ம் ஞாயிறு (Women's Sunday)
தேதி : 02/02/25
வண்ணம்: வெள்ளை
திருமறை பாடங்கள்:
சங்கீதம் :
2. திருவசனம் & தலைப்பு
திருப்பணியில் பெண்கள்
லூக்கா நற்செய்தி 8:3
(திரு விவிலியம்) ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
(பவர் திருப்புதல்). ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்து கொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.
3. ஆசிரியர் &அவையோர்
இந்த நற்செய்தி நூலை எழுதியவர் லூக்கா என்பவர் ஆவார். இவர் கிரேக்க இனத்தை சார்ந்த மருத்துவர் (கொலோ 4:14). இவர் பவுல் அப்போஸ்தலரின் நண்பரும் மற்றும் உதவியாளருமாயும் இருந்தார். அப்போஸ்தலர் நடபடிகள் லூக்கா நற்செய்தியாளரால் எழுதப்பட்ட நூல்.
லூக்கா நற்செய்தி நூல் மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் இவ்விரண்டு நூல்களும் கனம் பொருந்திய தெயோபிலு -வுக்கும் மற்றும் பிற இனத்தவர்களுக்கும் எழுதப்பட்டுள்ளது.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
இந்த நூல் சுமார் கி.பி. 60-ல் ரோமில் வைத்து லூக்கா எழுதிருக்க வாய்ப்பிருக்கிறது என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எருசலேம் அளிக்கப்பட்ட கி.பி. 70 -க்கு முன்பு இந்த நூல் எழுதப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.
5. வசன விளக்கம்
இயேசு கிறிஸ்து பிரயாணத்தின் மூலம் தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பதின் ஆரம்பத்தை லூக்கா 8-ம் அதிகாரம் வரையறுக்கிறது. இயேசு கிறிஸ்துவோடு 12 சீசர்கள் மற்றும் அநேகம் நபர்கள் பிரயாணம் செய்தார்கள் அதில் ஸ்திரீகளும் (v. 2-3) மிக முக்கியமானவர்கள். ஸ்திரீகள் வெளிப்படையாக செயல்படாவிட்டாலும், மறைமுகமாக தங்களுடைய ஆஸ்திகளினாலும், உபசரிப்பினாலும் இன்னும் பல விதங்களில் ஆண்களுக்கு நிகராக ஆண்டவருடைய ஊழியத்தில் மிக முக்கிய பங்கு வகித்தார்கள்.
அதுமட்டுமல்ல, இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் உயிர்த்தெழுந்த பின்பு தரிசனமாதல் போன்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தில் இருந்த இந்த பெண்களே *சாட்சியாக* இருக்கிறார்கள் (லூக்கா 23:43-24:8). எனவே இயேசு கிறிஸ்துவினுடைய ஊழியத்தில் பெண்களுடைய பங்கு மிகவும் இன்றியமையாததாக இருந்தது.
6.இறையியல் & வாழ்வியல்
வரலாற்றிலே மனிதராக பிறந்த இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் காட்சியளித்தல் இவையெல்லாம் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்திலும், இன்றைய கால கிறிஸ்தவ நம்பிக்கையிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிகழ்வுகள் எல்லாம் நடந்தது என்பதற்கான முழு அத்தாட்சி யாரென்றால் இயேசு கிறிஸ்துவோடு ஊழியத்தில் இருந்த பெண்கள் மாத்திரமே. எனவே, இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தில் பெண்கள் நேரடியாகவோ எனது மறைமுகமாகவோ அநேகம் உதவி செய்திருக்கிறார்கள்.
ஆணாதிக்கம் நிறைந்த யூத சமுதாயத்தில் இயேசு பிறந்திருந்தாலும் அவருடைய ஊழியத்தில் பெண்களை பயன்படுத்தினார். அதைப்போல ஆதி திருச்சபையிலும் பெண்கள் மிக முக்கிய பங்கு வகித்தார்கள் ( லீதியாள், பிரிஸ்கில்லாள், தபித்தாள் etc).இன்றைய திருச்சபையின் வளர்ச்சிக்கு பெண்களுடைய பங்கு மிக முக்கியமாக தேவைப்படுகிறது. குறிப்பாக, ஜெபிப்பதில் மாத்திரமல்ல திருச்சபையின் நிர்வாகத்திலும், திருச்சபையை வழி நடத்துவதிலும் தேவை எனவே பெண்கள் தங்களை தாங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொண்டிருக்காமல் இயேசுவின் ஊழியத்திலும், ஆதித் திருச்சபையிலும் பெண்கள் செயல்பட்டது போல இன்றைய காலத் திருச்சபையிலும் பெண்கள் செயல்பட வேண்டும் அதற்கான வாய்ப்பை திருச்சபை ஏற்படுத்திக் கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டும்.
7. அருளுரை குறிப்புகள்
திருப்பணியில் பெண்கள்
1. ஜெபத்தால் தாங்கும் பெண்கள்
2. ஆஸ்தியால் தாங்கும் பெண்கள்
3. பணிவிடையால் தாங்கும் பெண்கள்
Written by
Mr. T. Rebin Austin
Catechist
CSI Diocese of Tirunelveli
0 Comments