யார் இந்த செருபாபேல்?
பாபிலோனிய அடிமைத்தனத்தில் அங்கு (Seed of Babylon) பிறந்தவர்.
மன்னர் அரண்மனையில் சாப்பிட்டு வளர்ந்தவர்
யூதேயா பகுதி கவர்னர் ஆக நியமிக்கப்பட்டவர்
கோரேஸ் ஆட்சிக் காலத்தில், விடுதலை பெற்ற முதல் குழு யூத மக்களை யூதேயாவுக்கு வழிநடத்திக் கொண்டு வந்தவர்
இரண்டாம் எருசலேம் ஆலயத்தைக் கட்ட தலைமை தாங்கியவர்.
எந்த பின்னணியில் (ஆலயத்தை) சீரமைத்தார்?
1. தங்கள் பிரச்சினையை திசை திருப்பி ராஜாவிடம் தெரிவித்த சத்துருக்கள்
2. கடிதம் மூலம் மிரட்டல்கள்
3. சத்துருக்கள் எதிர்மறையாக பேசி சோர்வு அடைய வைத்தல்
கேட்கப்பட்ட ஏளனமான கேள்விகள்
1. யார் உனக்கு அதிகாரம் கொடுத்தது?
2. எப்படி சீரமைத்து முடிப்பாய் பார்ப்போம்?
3. எதிலே குற்றம் கண்டுபிடித்து வீழ்த்தலாம்?
கடவுள் கொடுத்த பதில்:
பெரிய பர்வதம் போன்ற பிரச்சினைகளை சமாளிக்க, தகர்த்து போட, செருபாபேலை பயன்படுத்த அவரை உற்சாகப் படுத்தி பேசினார் கடவுள். ஆகாய் & சகரியா இறை வாக்கினர்கள் மூலம் கடவுள் கொடுத்த உவமானங்கள்
1. முத்திரை மோதிரம்
ஆகாய் 2.23
அதிகாரத்தின் அடையாளம் & நெருக்கமான உறவு முறை
2. தலைக் கல்
சகரியா 4.7
காரியத்தை முடித்தலின் அடையாளம் (Symbol of Completion)
3. தூக்குநூல்
சகரியா 4.10
நேர்த்தியாக (குற்றமின்றி) செய்தல்
நிறைவாக,
இவர் இரண்டாம் எருசலேம் கோவிலை கட்டி சீரமைத்து முடித்தார். இந்த செருபாபேலின் சந்ததியில் தான் இயேசு கிறிஸ்து பிறந்தார்.
1. ஆலயத்தின் மீது பற்று
2. தீர்க்கர்கள் வார்த்தைக்கு கீழ்ப்படிதல்
3. தூய ஆவியார் சார்ந்து நிற்றல்.
இவை யாவும் அவரை சீரமைப்பின் சந்ததியாக உருவாக்கின.
முத்திரை மோதிரம் |
தலைக் கல் |
தூக்கு நூல் |
By
Meyego
0 Comments