1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: பெந். திரு.நாள். பின். 15-ம் ஞாயிறு (திரித்துவ 14)
தேதி: 01/09/2024
வண்ணம்: பச்சை
திருமறை பாடங்கள்:
சங்கீதம்:40
2. தலைப்பு & திருவசனம்
கிறிஸ்துவின் பிரதான கட்டளை
ஏசாயா 6:8 (பவர் திருப்புதல்)
பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும் என்றேன்.
(திருவிவிலியம்) மேலும் "யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?" என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, "இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்" என்றேன்.
3.ஆசிரியர் & அவையோர்
பழைய ஏற்பாட்டின் பவுல் என்று அழைக்க கூடிய சிறப்பை பெற்றவர் ஏசாயா ஆவார். ஏசாயாவின் தகப்பன் யூத அரசனான யோவாசின் இளைய மகன் ஆமோத். ஏசாயா ஒரு சிறப்பான அரச குடும்பத்தில் பிறந்தவர் மற்றும் சிறந்த மொழி நடையும், இலக்கிய நடையும் பெற்றவர். இவரது மனைவி தீர்க்கதரிசினியாக இருந்தார், இவருக்கு இரண்டு குமாரர்கள் இருந்திருக்க வேண்டும் ( 7:3; 8:3). எருசலேமில் தன்னுடைய தீர்க்கதரிசன ஊழியத்தை நிறைவேற்றினார். இவரது தீர்க்கதரிசனம் அரசனாகிய மனாசேக்கு எரிச்சலை ஏற்படுத்தினதால், மனாசே இவரை இரு தடிகளுக்கு நடுவே கட்டி வைத்து வாளினால் அறுத்து கொலை செய்ததாக யூத பாரம்பரியம் கூறுகிறது. எபி. 11:37 இதை குறிப்பாதாகவே இருக்க வேண்டும்.
யூதாவை தேவனிடம் திருப்புதல் மற்றும் மேசியா மூலம் வரும் இரட்சிப்பை எடுத்துரைத்தால்.
(ஏசாயாவுக்கு பின் 150 ஆண்டுகள் கழித்து கோரேசின் ஆணைப்படி சிறைவாசிகள் திரும்பிவந்து ஆலயத்தை காட்டுவார்கள் என்ற தீர்க்கதரிசனம் சிறப்பிற்குரியது).
4. எழுதப்பட்ட காலம்
ஏசாயாவின் தீர்க்கதரிசன ஊழியம் சுமார் கி. மு. 740 முதல் 681 வரை (1:1). 1-39 அதிகாரங்கள் கி. மு.700 மற்றும் 40-46 வரையிலான அதிகாரங்கள் கி. மு. 681-லும் எழுதப்பட்டதாக கருதலாம். இந்த புத்தகத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. First (Proto) Isaiah = 1-39
2. Second (Deutero)Isaiah=40-55
3. Third (Trito) Isaiah = 56-66
5. வசன விளக்க உரை
ஏசாயா 6-ம் அதிகாரம் ஆண்டவருடைய பரிசுத்தத்தை குறித்து ஏசாயா கண்ட தரிசனத்தையும் மற்றும் அவருடைய தீர்க்கதரிசன ஊழியத்தையும் எடுத்துரைக்கிறது. 8-ம் வசனம் ஏசாயாவினுடைய தீர்க்கதரிசன அழைப்பிற்கு(v. 8a) அவர் எப்படி ஆண்டவருக்கு பதில் சொல்லுகிறார் என்பதை காண்பிக்கிறது.
ஆண்டவருடைய நியாயத்தீர்ப்பின் செய்தியை ஆகாஷ் ராஜாவின் காலத்தில் வாழ்ந்த கடின இருதயமுள்ள யூதாவின் மக்களுக்கு (v. 9-10) தீர்க்கதரிசனமாக சொல்ல வேண்டும் என்கிற தன்னுடைய வாஞ்சை மற்றும் சிறப்பான அழைப்பை ஏசாயா தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்துகிறார், அதற்கு கீழ்படியும் விதமாக ஏசாயா தீர்க்கதரிசி தன்னை அனுப்புமாறு அர்ப்பணிக்கிறார்.
(இங்கேv. 8 *நமது* என்கிற பண்மை சொல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பன்மைச் சொல்லானது ஆண்டவருடைய தெய்வீக சபையை-(Divine Counsel) குறிக்கலாம் (v.1-4) அல்லது திரித்துவத்தை குறிக்கலாம்).
6. இறையியல் & வாழ்வியல்
ஏசாயா 6-ம் அதிகாரம் ஏசாயா தீர்க்கதரிசி கடின இருதயமுடைய யூதா மக்களுக்கு ஆண்டவருடைய செய்தியை அறிவிக்கும்படியாக சிறப்பு தீர்க்கதரிசன அழைப்பை (Special Calling) பெறுகிறார். இதே போல, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் ஆண்டவருடைய இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவிக்கும்படியாக நம் ஒவ்வொருவருக்கும் கட்டளை கொடுத்திருக்கிறார் (மாற்கு 16:5). ஏசாயா தீர்க்கதரிசி ஆண்டவருடைய அழைப்பிற்கு கீழ்படிந்தது போல நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவினுடைய கட்டளைக்கு கீழ்படிந்து அவருடைய பிரதான கட்டளையை நிறைவேற்றுவோம்.
7. அருளுரை குறிப்புகள்
1. ஆண்டவருடைய கட்டளையை or அழைப்பை பெற்ற ஏசாயா தீர்க்கத்தரிசி (v. 8a).
2. ஆண்டவருடைய கட்டளை or அழைப்பை புரிந்து கொண்ட ஏசாயா தீர்க்கதரிசி (v. 9-10)
3. ஆண்டவருடைய கட்டளைக்கு or அழைப்புக்கு அர்ப்பணித்த ஏசாயா தீர்க்கதரிசி (v. 8b).
Written by
Mr. Rebin Austin
Catechist
Kallidaikurichi Pastorate
0 Comments